பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


பெண்ணின்சொல் கேட்டுப் பெண்கள் பிடிப்பாகச் சிரித்தும், பேசாக் கண்ணனின் கருத்தைக் கண்ட காளையர், கடியுங் காலங் குண்னுணும்நல் லுணவும் கூட உண்மையில் சுவையும் குன்ற, எண்ணின கண்ண னேற்ப இயம்பினுன், எளிய மாற்றம்:

'பொன்னையோ, புனுகை யோ, பூப் போட்டபொன் வண்ணச் சேலை தன்னையோ, - தருதல் தக்க தாகாது! தரணி காண, என்னையோர் தட்டத் திட்டின், றெடுத்தொரு பரிசாய், என்றன் மன்னியே! மகிழ நீயே மல்லிகைக் களித்தி" டென்றே ,

"பெரும்போடு போட்டான்; பெண்ணின் பேச்சுப்பை பிய்ந்து போச்'சென் றரும்பாடு பட்டா ரன்றங் கனைவரும், அகம்பீ ரிட்டு வாம்போடிக் கடக்கும் தத்தம் வாய்ச்சிரிப் படக்க! வாய்த்த கரும்பாடிச் சாறு பாகாய்க் கற்கண்டாய்க் கடித்தார்ப் போன்றே.

"மறிமாறி யூட்ட வந்தால் மதிமாறும் . ஆடும்! மாலை, தறிமாறிப் பசுவும் தங்கின், தடுமாறும் கன்றும்! தந்தை, குறிமாறிக் குடும்பப் பாங்குக், குணம்மாறி வழக்கைக் கூட்டி நெறிமாற, நிறைந்த செல்வம் நிலைமாற,__ நின்றே னின்றே.