பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

70


'தஞ்சமென் றொருவன் தாளில்
தாழாதான், தாழ்ந்தோர் தம்மை,
வஞ்சமென் றெதுவும் செய்து
வருத்தாதான், வஞ்ச கர்பால்
பஞ்சமென் றிரந்து கஞ்சி
பருகாதான், பகுத்தா ராய்ந்த
நெஞ்சமென் னும்சான் றொன்றை
நீக்காதான் தமிழ’ னென்பர்.

‘தெருவினில் பசுவின் கன்று
தேர்க்காலில் சிக்கித் தீரச்
செருவினில் கூடச் செங்கோல்
சீர்கெடா தோச்சு வோன்,சேய்
உருவினில் உறுமூ றைத்தேர்
ஊர்ந்துடன் தீர்த்து வைத்துப்
பரிவினில் நீதி காத்தோன்,
பண்புள்ள தமிழ’ னென்பர்.

'உதவியின் நிமித்த முற்றோர்
உத்தமி வாழும் வீட்டுக்
கதவினைத் தட்டிக் கண்ட
காரணம் கருதிக் காவல்
விதிவிளை வறிந்து தன்கை
வெட்டியே காத்தான் நீதி:
பதவியில் படிறு பற்றாப்
பழங்காலத் தமிழ’ னென்பர்.

சொல்வேறு செயல்வே றான
சூதர்சூத் திரம்சொல் வோராய்ப்
"புல்வேறு, நெல்வே’ றென்று
புரியாமல் புதிர்கள் போட்டின்
றில்வீறு குன்றி, வாழ்வில்
இயலாமை, இன்மை,- இன்ன
பல்வேறு துயரில் மாட்டப்
பட்டனன் தமிழன் பாரில்!