பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


<poem>முக்தியென் கின்ற பொய்யை முடிந்துகண் முன்னால் போட்டுப் "பக்திபா லித்தோர் பங்கு பற்றுவர் பார்மே’ லென்று, யுக்தியா யுபதே சித்திங் குழைக்காது பிழைப்பா ரூரார் சக்தியைச் சதிசெய் தின்னும் சர்வநா சம்செய் கின்றார்.

சொத்தின்றிச் சுகமு மின்றிச் சோற்றுக்குத் தாளம் போட வைத்தென்றும் வருந்த வைத்து, வயணமாய்க் கர்ணம் வாழ்வில் மெத்தென்று திண்டில் சாய்ந்து மேல்மாடி மீதில், ‘தென்றல் சத்’தென்று வாங்கு கின்றான்; சாகின்றார் தமிழ’ ரென்றான்.

“பாயினைப் பரப்பி விட்டுப் பாங்காகத் திரும்பென் பக்கம்! வாயினைத் திறந்தால் மூடும் வழக்கமும் வேண்டும்; வாடும் காயினைக் கசக்கிக் காட்டிக் "கனி'யெனின் கசக்கும் கண்ணா! தீயினைப் பெய்தாய் காதில் தீய்ந்திடச் சொல்லாய்த் தேர்ந்தே!

'காட்டிலே வைத்த கண்ணி கவுதாரிக் கெனக்கா ணது, வீட்டிலே வளர்ந்த கோழி, விரைந்துபோ யதிலே வீழ்ந்து, கூட்டிலே உதவி கோரிக் கூவியே குலைந்த’ தென்றால், நாட்டிலே வுள்ளோ ரெள்ளி நகைக்காது தள்ளா ரன்றோ?