பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

77


'மழுங்கிய கத்தி' யென்று
மாற்றார்கள் மறைவி லேசப்
புழுங்கியே நெஞ்சு புண்ணாய்ப்
புலம்பவும் மாட்டேன்; பொய்யன்
விழுங்கிய விதமே, வீறி
வெளியேற்றி விடுவேன்; வேண்டும்
ஒழுங்கறி வுறுதி,- யாவும்
உளத்தினி லுண்டு கண்டீர்!

கல்லையே கவணில் வைத்துக்
ககனத்தி லெறிந்த காலை,
'தொல்லையே தோன்றிற்’ றென்று
தூரம்போய்த் துயரத் தோடும்,
‘இல்லையே எனக்குத் தக்க
இடமிங்கே’ யெனத் திரும்பி
ஒல்லையே வுவக்க வந்திவ்
வுலகில்கல் லொன்ற லுண்டே!

கழிக்கெண்டை மீனைக் கெளவிக்
காத்திடும் குஞ்சுக் கூட்ட,
எழக்கண்ட குருகை வல்லூ
றெர்திகொண்ட தெனவே, கர்ணம்
அழக்கொண்ட எனது சொத்தை
அழச்செய்து பெறுதற் கான
வழிக்கண்டு கொண்டே னென்று
வாய்திறந் துரைத்தே” னென்றே.

திருந்திய கருத்தும், தெள்ளத்
தெளிவான முறையும் செப்பி,
வருந்திய தமக்கை யின்நன்
வதனமும் மலர வைத்து,
விருந்தினை முடித்துக் கொண்டு
விரைந்தெழுந் தங்கி ருந்து
பொருந்தவே கழகத் திற்குப்
போய்ச்சேர லானான், கண்ணன்!