பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

13 அய்யன் செய்த அவம்

  • தாமரைத் தேற லாரத்

தவிர்த்ததில் தவளை தங்கித்
தோமுறு பூச்சி தோன்றத்
தொழுதது துணையோ’ டென்ன,
தேமுறு தமிழைக் கற்றுத்
திளைத்தலைத் தவிர்த்து விட்டுக்
காமுறு கயமை, கள்ளம்
கருதியே அய்யன் செய்வான்.


மதியிளங் குழவி மாதா
மலைமங்கை மடியில் குந்தச்
சதியுளஞ் சார்ந்து கஞ்சா
சாராய மருந்து வித்தந்
நதியழி கரைமேல் நச்சி
நடந்தனன் சுந்த னோடும்,
விதியழி விதமவ் வூரில்
வில்லங்கம் விளைத்தற் கென்றே.


"எள்ளுவா ரென்ற எண்ண
மெள்ளள வின்றி ஏகும்
கள்ளர்கட் கிரவில் கண்கள்
கால்களி லுளகா’ ணென்ன,
முள்ளுகள், புதர்கள் மூடி
முட்டியை முறிக்கும் மூடாப்
பள்ளங்கள் கடந்து சென்ருர்
பாவிகள் பயமில் லாகே!


ஆற்றரு கமைந்த காட்டில்,
ஆவலாய் வரதப் பன், நல்
லுாற்றினைத் தோண்டி, யுள்ளே
ஊறும்நீ ரிறைக்க வோர்சால்
ஏற்றினை யிணைத்து, வெண்டை,
இனியதக் காளி, - யின்ன
மாற்றியே பயிர்செய் கின்ற
மனங்கவர் தோட்டம் புக்கார்.