பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


இனமான இவர்கட் குள்ளே "இணையில்லை இவனுக்” கென்னக் கனமான கலையைச் சின்னக் கடுகெனக் கருத்தில் காண, மனமான மலரில் மாந்தும் மதுகர மாக்கிச் "சுந்தா! அனுமானவ் வனம ழித்த தறிந்தாயா?" என்ரு னய்யன்,

"ஆகாகா! அறிந்தே னன்றே ஆடியும் காண்பித் துள்ளேன்; பூ, காய், பிஞ் செல்லாம் கீழ்மேல் புழுதியில் புரளு மாறே, பாகாக இனித்த தன்றப் பைம்பொழி லழித்த காட்சி! நோகாதென் காதில் நூலாய் நுழைத்திர்நீர்!" என்ருன், சுந்தன்.

" நாடியில் வூரில் நாமந் நாடகம் நடத்த வேண்டும்: தேடியவ் விலங்கைத் தீவில் திருமகள் தனைச்சே வித்து, நீடியவ் வனத்தை நீக்கும் நிகரற்ற அனும னுய்நீ பாடியவ் விதம்ந டித்தால் பார்ப்பேன் நா" னொன்ருன், பாவி!

சிறைகூட, தேசப் பற்றில் சிறந்தவர்க் கொதுக்கச் செய்து, கறைகூட ஆட்சி காணும் கட்சிகள் கனக்கும் நாட்டில், இறைகூட இலையே! 'ஏற்கா திச்செய' லெனவும்! ஏமப் பிறைகூட இலையே! பேசிப் பிழையிதைத் தடுப்ப தற்கே!