பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

'பகையாவான் மனித னன்றிப் பசு,பயிர், பறவை,- எந்த வகையாயும் பகையா காது! வருந்தவே வந்தின் றிந்த மிகையான செயல்செய் தோரின் மேல்தோலை உரிக்கோ மாயின் நகையாகு மென்வே நல்லோர் நைந்துளங் கொதிக்க லானுர்! "ஏர்க்கள மிதில்தோல் விக்கே இடமில்லை" யெனுஞ்சொல் பொய்க்க, வேர்க்கிளம் பிட,வே ளாண்மை வீணுக, வெறியால் வீழ்ந்த போர்க்களம் போல்' ரண்டு போனதைப் பார்த்துக் கண்கள் நீர்க்குள மாகக் கோபம் நிலைக்களம் நெஞ்சா பிற்றே! "நேர்ந்ததைப் பற்றி யெண்ணி நேர்வதை யறித லென்றும் தேர்ந்தவர் செயலென் ருய்ந்தோர் தெரிவித்த கருத்துக் கேற்பச் சேர்ந்தவர் தமக்குத் தீங்கு செய்வித்துச் சேர்ந்தோர் தம்மைச் சார்ந்தவர் மீதில் குற்றம் சாற்றிடும் சதியிஃ தென்றே, குப்பனும் குருவும் குந்திக் குறிப்பாக அய்யன் சூழ்ச்சி தப்பறப் புரிந்து கொண்டு, தாமத மின்றித் தாமாய்ச் செப்புதல் செய்த லின்ன சீக்கிரம் தெளிந்து சேர்ந்த அப்பன்க ளனைவ ருக்கும் அறிவித்து வைத்தா ரன்றே.