பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

14 கச்சேரி காணக் கழறல் காட்டிலே கண்ட நட்டம் கடுகெனக் கருதுங் காலும், நாட்டிலே, நடப்பைக் கேட்டோர் நகுவரென் றெண்ணி நாணி , வீட்டிலே வரதப் பன்வேர் விட்டுவீற் றிருந்த வேளை, கூட்டிலே கண்ணி வைக்கும் குறவன்போல் வந்தான், அய்யன். பானையைத் துாக்கிப் போட்டுப் பழம்பானை யுடைப்பான்; பற்றிப் பூனையைத் துரக்கிப் பொல்லாப் புலிமீதி லெறிவான் பொன்ற! யானையைத் துாக்கி அஞ்சா யாளிமுன் அலைக்கப் போடு வானையும், வழக்கம் போல வரதப்பன் வரவை யேற்ருன். "சாதியும் மதமும் சாராச் சமநீதி வழங்கும் சட்டம்! நீதியைப் பிட்டுக் காட்டும் நிகரற்ற நியாய வாதி: சேதியை நேரில் கண்ட சிறப்பான சாட்சி! சேர்ந்து வாதியாய் வந்தால் போதும் வரதப்பா, நீயென் ளுேடே! தோட்டத்தைத் தொலைத்துப் போடத் தோதகம் செய்வோ னுங்கள் கூட்டத்தி லுள்ளான்; துட்டன் கொட்டத்தை அடக்கக் கோரின், வாட்டத்தை விட்டுப் பூட்டு வண்டியை வரதப் பா! நாம் ஆட்டத்தைக் கச்சே ரிக்குள் ஆடவைத் தவனைப் பார்ப்போம்!