பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


பங்காளி மருதப் பன்றன்
பண்ணையாள், அவன்தா னந்தச்
செங்கனின் மூத்த பிள்ளை
செல்லனே செய்தா னென்று,
கங்குலில் மீன்பி டிக்கக்
கால்வாய்க்குச் சென்ற சுந்தன்
சங்கைக்கே இடமங் கின்றிச்
சாற்றினன், சற்று முன்னே!

வாலாடிற் றென்றல் நம்பும்
வகையாது, தலையா டாது?
'கோலாடி னன்றிக் குட்டிக்
குரங்கதூம் ஆடா’ தென்பர்.
"மேலாடி யாவோ னேவ,
மிருகத்தை யொத்த அந்தக்
காலாடி செய்தா’ னென்றே
கருதுதல் கருமங் காணாய்!

போனது போயிற் றென்று
போகாம லிருந்தால், பொல்லார்
தானிது போன்று தப்பைத்
தயங்காது செய்தே தீர்வார்!
ஆனது கச்சே ரிக்குள்
அடிநுணி அலசச் செய்தே
நானிது நடத்தி வெற்றி
நாட்டுவேன் நாளைக்” கென்றான்.


“அழுகியும் போகும் வானம்
அழுதிடின்; அதுவு மன்றி,
முழுகியே போன போதும்,
முறையின்றி முனிந்து முற்றும்
பழகினோர் மேல்பாங் கற்றுப்
பழிபாவம் சுமத்தின், பாரில்
ஒழுகிய ஒழுக்கத் திற்கோ
ரூருகித் தீரு மன்றோ?