பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

85



மச்சேறி மணக்க வாழ்ந்து
மகிழ்ந்தவர் மதிமாய்ந் தோராய்க்
கச்சேரி யேறிக் கண்ட
கைம்முடிப் பிழந்து, கண்முன்
குச்சேறிக் கஞ்சி காய்ச்சிக்
குடித்திடும் விதமும் குன்றிப்
பிச்சேறிப் பிதற்றி, யூர்க்குள்
பிறரெள்ள இறந்த துண்டே!

'படிகெட்ட கிணற்றுப் பொந்தில்
பாங்காக வாழும் பாம்பைப்
பிடிகெட்டுப் பற்றின், பின்னால்
பிணமாக வேண்டி நேரும்!
செடிகெட்ட செயலைக் கண்டே
சினந்துகச் சேரி யேறின்,
குடிகெட்டுப் போகு’ மென்றும்
குறிப்பிட்டுச் சென்றான் கண்னன்.

முதிராது போது, காற்று
மோதினும் புளியங் காய்கள்
உதிராது; பழுத்த போதோ
உதிராம லொன்றி டாது!
பதறாது பகுத்துப் பார்த்துப்
பண்ணுவோர் பணிகள் பாரில்
சிதறாது: செயல்கள் தெய்வ
சித்தம்போல் நடக்கு’’ மென்றான்.

வீட்டுக்கு வெளியே வீற்றிவ்
விவகாரம் விளங்கக் கேட்டுத்
தீட்டுக்குள் ளாயும், தீயாய்த்
தேவாத்தாள் தெளிந்து வந்’’துன்
பாட்டுக்குக் காதைப் போட்ட
பாவத்தின் பயனுய்த் தோட்டம்
கேட்டுக்குள் ளாயிற் றின்று;
கேலிக்குள் ளானோம் கெட்டே!