பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

87

 15 அய்யன் தலைமறைவு

'மலைமீதி லிடிக்கு மாறு
மாமுகி லதனக் கோரத்
தலைமீதி லிடித்த' தென்னத்
தடுமாறித் தவித்துத் தாழா
தலைமீதி லலையாய்த் தன்தப்
பலைத்திட, அய்யன் கொல்லன்
உலைமீதி லுமியா யுள்ளம்
உருக்குலைந் துளையச் சென்றான்.

அத்துட னகத்தில் கூட
அச்சமுண் டாகப் பாவ
வித்துடன் விதிநீர் சேர்ந்து
வேர்விட்டு முளையும் விட்டால்,
சத்துடன் சனித்த மேனிச்
சதைவீங்கித் திரும்! சாகா
தொத்தடம் கொடுக்கக் கூட
ஒருகால்நே ரும்தா னென்றே,

'ஒன்றுமன் றிரண்டு மன்றே,
ஒன்பதைச் செய்து வென்றும்,
இன்றிதில் தோல்வி யுற்றேன்
எத்தனிச் சுந்த னால் நான்!’
என்றுநெஞ் சிடிந்தே மாறி
இழிவழி விரண்டு மய்யன்
சென்றிடு மிடத்திற் கெல்லாம்,
சென்றன, சிதைக்கச் சேர்ந்தே!

அறுகரி யரியாய்ச் சால
அடர்த்தியாய் வளர்ந்த ஆற்றின்
மறுகரைக் கல்மேல், சுந்தன்
மனமொன்றிக் குந்தி னோனாய்ச்
சிறுகரும் புழுவைக் கோத்துச்
சீராகத் தூண்டில் வீசிக்
கிறுகிறென் றிழுத்துக் கெண்டை
கெளிற்றுமீன் பிடிக்கக் கண்டான்.