பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


கண்டதும் அய்யன் கன்றிக்
கைதட்டி யழைக்கச் சுந்தன்,
அண்டையில் வந்து நிற்க,
அகமன லாகிப் பாவி!
உண்டவீட் டுக்கு நஞ்சே!
ஊன்றிய காலில் முள்ளே!
முண்டனே! யென்ருேர் மூச்சு
முறையாக முடித்தான், வைதே!

சேரியில் கிடந்து சாகும்
செம்மி நாய்ப் பயலே! சேரப்
பூரியும், கிழங்கும் போட்டுப்
பூசித்துப் புசிக்க வைத்தும்,
காரியம் கெடுத்தாய்! காணக்
காட்டியும் கொடுத்தா' யென்று
வாரியே இறைத்தான், வாய்ச்சொல்
வகைக்கொன்று, வடிவுக் கொன்றே!

"காலேயி லிருந்து கஞ்சி
காணாது, காத்திருந்து,
வேலையை மட்டும் வேறு
விதியின்றிச் செய்து விட்டு,
மாலையில் சுட்டுத் தின்ன
மடுவில் மீன் பிடிக்கும் போது,
சேலையில் பேனாய் வந்தேன்
சேர்ந்திர்கள் நீரின் றிங்கே?

நெஞ்சினில் நேர்மை யில்லா
நீசரென் பவர்நீ ரய்யா!
அஞ்சனை யருமை மைந்தன்
அனுமனை யாக்கி யென்னை,
பிஞ்சினை, - பழங்கா யோடும்
 பிறர் செடி பிடுங்கச் செய்யும்
வஞ்சனை, தமிழர் தங்கள்
வாழ்வுதாழ் வெதிலும் வைக்கார்!