பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


'கஞ்சாகள் வேண்டா' மென்று கால்தொட்டேன்; கைதொட் டீர்நீர்; கெஞ்சினேன்; 'குடித்தால் தான்நீ கேள்; அன்றேல் கிழெ'ன் றீர்நீர்; அஞ்சாம லயலார் சொத்தை அழித்திடச் செய்வித் தீர்நீர்; எஞ்சாத பழிக்குள் ளாக்கி என்வேரும் அறச்செய் வீர்நீர்!

சின்னம்மா ளிடமிச் செய்தி செப்பாமல் மறைத்தி ருந்தால், என்னம்மா வளர்த்த மேனி இதற்குள்நாய் நரிகள் கூடித் தின்னும்மா வாகி எங்கோ தெரியாமல் கிடந்தி ருக்கும்! இன்னும்மா புரிய வில்லை இதுவுமக்” கென்றன், சுந்தன்!

மண்டையில் மூளை யில்லா மண்டுகப் பிண்ட மே! நீ பெண்டுக ளிடமிச் செய்தி பிதற்றலா மோடா!' என்றே, துண்டினை யுதறித் துாக்கித் தோள்மீது போட்டுக் கொண்டு கண்டபே ருந்தில் குந்திக் கண்மறைந் தானன் றய்யன்!