பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

90


16 காதல் கனிந்தது

குழியிலே குவளை தங்கிக்
கோலங்கொள் கிறவூர் விட்டுப்
பழியிலே பாவம் தங்கப்
பண்ணினேன் பறக்கக் கண்ணன் ,
மொழியிலே முதுமை தங்க
முகத்திலே இளமை தங்க,
விழியிலே விளக்கம் தங்க
வினைதங்க இருந்தான் வீட்டில்!


ஒழுக்கத்தை உடலா யோம்பி,
உண்மையை உயிரா யூக்கி,
இழுக்கத்திற் கிடமீ யாமல்
எளியோர்கட் கிரக்கம் காட்டிப்
பழக்கத்தில் பண்பை யூட்டும்
பைங்கிளி நீலா, பைய
வழக்கத்திற் கன்று மாறாய்
வாழ்முறை வகுக்க வந்தாள்.


முல்லையின் மணத்தை முன்னே
முன்றிலில் நின்ற னுப்பி,
மெல்லிய லன்ன மென்ன
மென்மெல இயங்கி மேவிச்
சொல்லியல் பனைத்து மோர்ந்து
சுவைபடச் சொல்லுங் கண்ணன்
நல்லியல் மனைக்கு ளத்துள்
நளினம்போல் நயக்க நின்றாள்.


பொருவிலாப் புள்ளி மான்முன்
பொருந்தவோர் பொன்மான் போந்து
வெருவிலா வீட்டி லன்று
விரும்பிநின் றிருத்த லேயோ!
‘பிரிவிலா திருந்து பேறு
பெறுகெ’ன வாழ்த்த லேயோ!
விரிவிலாக் கவிதை நூலால்
விளக்குதற் கரிதக் காட்சி!