பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

91


பிடியினை நடையால், பேசாப்
பிறையினை நுதலால், பின்னும்
கொடியினை இடையால், கூவும்
குயிலினைக் குரலால் வென்றிப்
படியினில் பரவ வாழும்
பைங்கிளி பணிந்து, பார்வை
கடையினில் வைத்துக் கண்டாள் ,
கண்ணனின் கமலக் கண்ணை.

“தெய்வதம் தேகம் தீண்டிக்
திகழ்ந்திட விரும்பித் தீய
பொய்வதம் புரியப் பூத்துப்
புகழ்மணம் கமழும் பூனை,
மெய்வதம் செய்யும் பேயின்
மேனிமேல் சூட்டல் மேவிக்
கொய்வது கூற வந்தேன் ,
கோமானே! என்றாள் கோதை!

 “நிதிபூத்த மலர்கள் நேர்ந்த
நிறத்தினால் நிறைவை எய்தும்;
மதிபூத்த மலர்கள் மல்கும்
மணத்தினால் மாண்பை எய்தும்!
எதுபூத்த தெனினு மேற்றம்
எழில்மல ரெய்தும்: நீலா!
விதிபூத்த மலர் நீ! ஊரின்
 விடியலாய் விடுக!’’ என்றான்.

 “வால்காவி லிருந்து கங்கை
வரையிலும் வழிந டாத்தி,
வேல் காதலித்த வீர
வேளிர் தம் மகளிர் போன்முப்
பால்காவி லிருக்கை கோலிப்
பழம்புற நானூ றுண்ணுங்
கால், காத லித்தே னும்மைக்
கவின்விளக் காதற் கென்றே!