பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

92

கற்றதை யலசி யாய்ந்து
கடைப்பிடித் தொழுகு தற்கும்,
பெற்றதைப் பங்கி யுண்டு
பிறர்நலம் பேணு தற்கும்,
உற்றதை யுணர்த்து மும்மை
உறுதுணை கொளவே வுற்று,
மற்றிதை மறைவொன் றின்றி
மனந்திறந் துரைப்பே னின்றே.


ஊரின்றி யமையா தென்பர்
உவந்து நாம் வாழ; ஊரும்,
"பேரின்றி யமையா தென்பர்
பெருமையெய் திடவே; பேரும்
‘சீரின்றி யமையா’ தென்பர்
செந்தண்மை யாளர்; சீரும்
"நீரின்றி யமையா தென்பேன்,
நினைத்தினிப் பார்ப்பீர் நீரும்!


பிறையில்லை யெனின்பின் வானம்
பெருமையைப் பெறுவ தில்லை;
முறையில்லை யெனின்பின் நாட்டில்
முன்னேற்ற மில்லை; ஆண்மை
நிறையில்லை யெனின்வாழ் வின்பம்
நிலையில்லை; நெஞ்சி லேநீர்
சிறையில்லை யெனின்மற் றில்லை
சீவனின் றெனக்கு மென்றாள்.


எழில்தரு முகிலும், ஏங்கி
எதிர்பார்த்துக் கொண்டி ருந்த
பழந்தரு தோட்டம், தோப்பின்
பரிபவம் தவிர்த்தல் விட்டு,
நிழல்தரு மரமொன் றின்றி
நேர்நின்ற குன்றில் நேர்ந்து
மழைதரு மாயின், மற்றிம்
மாநிலம் மனம்நோ மன்றோ?