பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

93


பெருகவே பெற்று வாழப்
பிறந்தபெண் மணிநீ! பேசி
உருகவே செய்தின் றென்னை
உன்னவ னாக்கி வாழ்வைப்
பருகவே வைத்தால், உன்றன்
பரம்பரைப் பாங்கு பாழாய்
அருகவே செய்யும் சுற்றம்;
ஆய்ந்ததைப் பாரா’’ யென்றான்.


“கெஞ்சியே கேட்கின் றேனென்
கேள்,கிளை, கேண்மை,- யாவும்
விஞ்சிய கல்வி, கேள்வி,
விளக்கமு முடைய நீர்தான்!
நெஞ்சினில் நினைத்த தெல்லாம்
நேரிலே வைத்தேன்; ‘நீரே
தஞ்சமெ’ன் றுமது தாளைத்
தலையிலும் தரித்தே னின்று!


விடியாவான் றனில்நீர் வேட்கும்
வெள்ளியாய் விளங்க வேண்டிப்
படியாவேன், பாழும் இன்மைப்
பாதலத் திருந்து மீளத்
தடியாவேன், தவறித் தட்டித்
தடுமாற நேரின் தாங்கக்
கொடியாவேன் நான்,நீர் கொண்ட
கொள்கொம்பு மாவீ” ரென்றாள்.


"எட்டாத மரத்தில் விட்ட
இனியமாம் பழமிஃ தென்றும்
கிட்டாத’ தென்று விட்டுக்
கிடந்தவன் மடியி லின்று
தட்டாது விழுந்து விட்ட
தால்,தின்னத் தகுமா? என்று
கொட்டாது விட்டான் கண்ணைக்
கூர்ந்துற்றுப் பார்த்த வாறே!