பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


'மனமெனும் மனைக்குள் மங்கா மதிவிளக் கேற்றி, மாருக் கனவெனக் கருதிக் காத்த கவின்மிகு காதல் பூத்து, நனவெனக் கமழ்ந்த' தென்றே நகைமுகம் நயந்து காட்டிப் புனிதனும் புகன்ருன்: "நீலா! புகழ்மணம் புரிவோ" மென்றே.

விதிமுகங் கண்டு கொண்ட வென்றியால், விரிந்த வான மதிமுகங் கண்டு கொண்ட மணங்கமழ் குவளைக் கண்ணுள், பதிமுகங் கண்டு கொண்ட பரவசம் பருகப் பண்புச் சதிமுகங் கண்டு கொண்ட சாந்தியுட் கொண்டான் கண்ணன்!