பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


17 சீதாவின் சீற்றம்

நல்லதோ, அல்ல தோவூர் நடுவினில் நயந்து நின்று வல்லதாய்ச் சொல்லக் கேட்ட வதந்திக்கு வண்ணங் கூட்டி , இல்லெதா யிருந்த போதும், இசைவாக இருப்போர் காதில் சொல்லதாய்ச் சொரியா- வோரூர் சுவர்க்கத்தி லெனினு முண்டோ?

'எய்துவ தெல்லா மொன்ருய் இணைந்தெய்து மின்ன' லென்னச் செய்தியாய் இதுவும் வந்து சிந்தாது செவியிற் சேர, உய்தியொன் றுண்டோ உற்ற ஊரிலெ'ன் றுளமும் நொந்து, வெய்துயிர்த் தழுதாள், சீதா விழியில் நீர் ஒழுக விட்டே!

சாத்திரம், சம்ப்ர தாயம் சந்தியில் சிந்திச் சத்துப் பாத்திர மாகி வந்த பாவையைப் பார்த்துச் சீதா, 'நேத்திரம் நிலைக்கு மாடீ! நெறிகெட்ட நீலீ! நீசச் சூத்திரன் தனக்கா மாலை சூட்டிடத் துணிந்தாய்? தூதூ !

பிறந்துநீ வளர்ந்த வீட்டுப் பெருமையும் மிஞ்சு மாடீ! சிறந்தநம் தந்தை மானம் சிந்தவா செய்கின் ருய்? சீ! இறந்து நீ ஒழிந்தால் கூட இரண்டுநாள் துக்கம்! எல்லாம் அறிந்துரைக் கின்றே னுன்றன் அக்காநான், அடியே நீலா!