இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
தமிழன் இதயம் உரைப்பார் உரை கட் கெல்லாம் உயர்ந்திடும் செல்வனை உன்னுள் இருப்பவனை எண்ணிட நேரமில்லை. (ஒரு) சிலநாளைக் கதிகாரம் செய்யும் ஒருவர்க்கஞ்சி செய்யச் சொல்வதை யெல்லாம் செய்வாய்நீ பல்லைக்கெஞ்சி பலநாளும் ஜென்மமெல்லாம் பாலிக்கும் அதிகாரி பரமனை நினைக்கவும் ஒருகணம் உனக்கில்லை. (ஒரு) 'நாளும் கிழமை' யென்று நல்லவர் உரைத்தாலும் ' நாளைக்கு ஆகட்டும் வேலை அதிகம்' என்பாய் பாழும் பணத்தைத்தேடி படும்பாடு கணக்கில்லை பகவானை எண்ண மட்டும் அவகாசம் உனக்கில்லை. (ஒரு) 15