உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

                         : தமிழன் இதயம் :
                     கடவுளை அறிந்தவர்கள்
                             பல்லவி

<poem>அவரே கடவுளை அறிந்தவராவர் அனைவரும் மதித்திடத் தகுந்தவராவர்.

                                               (அவ)
                            சரணம் 

துன்பப்படுவோர் துயரம் சகியார் துடி துடித்தோடித் துணை செயப் புகுவார் இன்பம் தமக்கென எதையும் வேண்டார் யாவரும் சுகப்படச் சேவைகள் பூண்டார்.

                                               (அவ)

பசியால்வாடின எவரையும் பார்த்து பட்டினி தமக்கெனப் பரிதபித்தார்த்து விசையாய் முடிந்ததை விருப்புடன் கொடுப்பார் வீண் உபசாரம் விளம்புதல் விடுப்பார்.

                                               (அவ)

நோயால் வருந்திடும் யாரையும் கண்டு நோன்பெனச் செய்வார் எல்லாத் தொண்டும் தாயாம் எனவே தம்சுகம் எதையும் தள்ளிவைத் தருகினில் தாமிருந்து தவும்.

                                               (அவ)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/22&oldid=1448815" இலிருந்து மீள்விக்கப்பட்டது