பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள் புலவர் பெய்யும் வினைகளைக் கொண்டு உடையை உடுத்தி னரா? போர்த்தினரா? எவ்வாறு உடுத்தினர் என்பதைப் புரித்து கொள்ளலாம். 91 உடுத்தும் உடைகளைக் குறிக்க தைடு,உடீஇ, அணித்து, சேர்த்து, மருங்கிற் கட்டிய, அசைந்த, உலாக்கிடந்த, புனைந்த, துடங்கு, ஏந்திய, சுற்றிய, சாத்திய போன்ற வினைகளைக் காண் கின்ற நாம் கச்சை, கச்சு போன்று இறுக்கிக் கட்டப்பட்ட உடை களை வீக்கிய, விரித்த, கட்டிய போன்ற வினைகளால் குறிக்கும் தன்மையையும் பார்க்கின்றோம். போர்த்த, மறைத்த எனும் வினைகள் போர்வை போன்றவற்றிற்கும் குழ்ந்த, திருத்திய, இட்ட, புதைத்த போன்ற வினைகள் மேவாடைக்கும் பயன்படுத் தப்படக் காணலாம். இத்தகைய வினைகளை இன்றும் பயன் படுத்தும் நிலை கொண்டு அன்று தமிழர் உடுத்திய நிலையினை ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது. புலவரின் உவமை வழி ஒரு சில உடுத்தும் முறைகள் விளக்கமா இன்றன. தத்தி வீழும் அருவித் திரள் சாலும் உத்தரீகம் தெடுமார்பின் உலாவி (கபிய. 6991) மார்பில் அணியும் உத்தரீயத்தினை அருவிக்கு ஒப்புமையா குகிறான் கல்விக் கடலான கம்பன், மார்பு மலைவாக, அதில் வடிந்து வீழ் அருவியைப் போன்று உத்தரீயம் காட்டு தருகின்றது. காட்சிப் படிவமான இது, சிறந்த முறையில் நம் கண்முன் மார்பில் உத்தரியம் தவழும் காட்சியைப் புலப்படுத்து கிறது. தாம் பெற்ற இன்பத்தை இவ்வுளரும் பெற விழையும் புலவரின் கள வெளிப்பாடே இத்தகைய கவி நயங்கனாகும். இவை, புவவரீன் விழைவினை நிறைவேற்றுவதுடன் ஆய்வாளரின் -ஆய்விற்கும் விருந்தளிக்கின்றன என்பதற்கு இந்து ஓர் சான்று, இத்தகைய இடம் கட்டும் தன்மை மிகுதியாக இடையா டைக்கே அமைதல், தமிழர் இடையாடைக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவத்தை விளக்கவல்லது. புலவர் விளக்கிச் செல்லும் தன்மையிலும் சில குறிப்புகள் புலப்படக் காணலாம். பூங்கரை நீலத்தைப் புடைதாழ உடுத் தல் என்னும்போது பூங்கரை நீலமாகிய உடையைய் (முல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/104&oldid=1498905" இலிருந்து மீள்விக்கப்பட்டது