பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை உடல் இயல்புகளுக்கேற்ப உடை உடுத்தல் சாதாரண மாத்தர் நிலையே, மகனீர் ஆடவர் உடையை உடுத்தும் வழக் கமும் இன்று காணப்படுகின்றது. சமுதாய நிலை எனக் காணின், சாதி மதம் போன்றவற்றில் உள்ள கட்டுப்பாடு இன்று தளர்த்து விட்டிருக்கக் காண்கின்றோம். உளவியலுக்கேற்றபடி உடுத்தல் ஓரளவுக்குப் பின்பற்றப்பட்டு வருகின்றது. எளவே, காலந்தோறும் ஏற்படும் அரசியல், பொருனா தாரம், சமயம் போன்ற சூழல்களுக்கேற்ப ஆடையும் மாறுபட்டு அமைகின்றது எனல் பொருந்தும். மூலப் பொருட்களும் முதல் ஆடையும் இன்று மாந்தர், இயற்கை நல்கும் தாவர (vtgetable) விலங்கு (animal) இழைகளுட்ன், தன்னால் உருவாக்கப்பட்ட செயற்கை யிழைகளையும் (synthetic fibre) ஆடைக்காகப் பயன் படுத்துகின்றனர். செயற்கை இழைகள் கண்டு பிடிக்கப்படா தியையில், முதலிரு இழைகளையுமே மாந்தர் பயன்படுத்தினர். இவற்றுள்ளும் தழை, மரவுரி, தோல் இவையே ஆதி மனிதன் உடைகள். இவற்றுள் எது முதலாடை என்பது இன்றும் முடிவு செய்யப்படாத ஒன்று. அறிஞர் சிலர் தோலினையும், " சிலச் தழையினையும் முதலாடை என்பர். தழைபற்றிய எண்ணய் களே அதிகமாகக் காணப்படுகின்றன. சில'சான்றுகளை இவண் காணவாம். 1. ஆடையில் தோற்றத்துக்கு அழகு படுத்தலே காரணம் எனக் கண்டோம். இதற்குத் தோலினை விடவும் இலை தழை களைப் பயன்படுத்தினர் என்பதே பொருத்தமானதாகும். 12. "Whleh fibres were the very first to be used we cannot say' - The Story of Clotbes, Agnes Allen, P, 19, 13. "Man's earliest clothing consisted of animal pelts and hides. - Fundamentals of Dress-Marietta Kattunen-143, 5 14. தழையாடைகளுக்கும் மரப்பட்டை ஆடைகளுக்கும் பிறகு தான் தோல் ஆடைகள் கண்டு பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில், அரங்க பொன்னுசாமி, கொங்கு இதழ், 15-3-1976, பக்-39,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/18&oldid=1498771" இலிருந்து மீள்விக்கப்பட்டது