பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடைபற்றிய சொற்கள் - ஓர் ஆய்வு 25 இலக்கியச் சான்றுதுகளை நோக்க வேறுபட்டது என்னும் கருத்தே வலுப்பெறக் காண்கின்றோம். உடை, உடம்பைச் சுற்றி உடுத்தப்படும் உடையைக் குறிக் கின்றது. ஆடை, ஆதியில் இப்பொருளிலிருந்து பின்னர் துணியைக் குறிக்கும் பரந்த பொருளில் வழங்கத்தலைப்படு கின்றது, எனவே உடை, உடைபினையும் (dress) ஆடை, துணி யினையும் (Cloth) குறித்து மக்களிடம் பயிலப்பட்டது என்பது பொருத்தமானதாகும். சில எண்ணங்களைக் காணலாம், 1. மரனாருடுக்கை, தழை என்ற தமிழர் உடைகளை இலக்கியங்கள் சாற்றுகின்றன. இவ்வுடைகள் உடையாக மட்டுமே பயன்பட்டன. எனவே உடை என்று மட்டுமே இவை கட்டப்படுகின்றன. ஆயின் பருத்தி, பட்டு, மவிர் போன்ற பிறவற்றால் உருவானவை உடுத்துதற்கே அன்றி போர்வை, அணை, எழினி போன்ற பிற பயன்பாடுகளையும் தல்கிற காரணத்தால் ஆடை என்றும் அழைக்கப்படக் காணலாம். 2. சிந்தாமணியில் முசிய இடை உடையாக (2919) என்று இழிந்த ஆடையை இரமை கடையாகக் காட்டியிருத்தல், உடைவை ஆடையிலிருந்து வேறுபடுத்தி இருத்தலை இயம்பும், உடைக்கும் ஆடைக்குமுரிய இந்துண்ணிய மாறுபாடு ஒருசில இடங்களில் தெகிழ்ச்சியுற்றிருக்கக் காண்கிறோம். பூப்புடை அணித்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல் இலக.2772. தொடையுறு வற்கலை ஆடைகற்றி·லற்கலை உடைாண்டு -BEL கம்ப. யுத்த. 7252- ஆடை எனவே பெரும்பாலான காட்டுகளை நோக்க உடை, ஆடை இரண்டும் முதலில் ஒரே பொருளில் தின்று பின்னர் மாறுபாடாகக் கருதப்பட்டது எனத் தெரிகின்றது. இன்றும் இம்மாறுபாடு உள்ளதைக் காணலாம். உடை, உடுக்கை இன்றும் உடையைக் குறிக்க, உடுப்பு பெரும்பான்மையாகச் சட்டையைக் குறிக்க வழங்குகின்றது. உடுக்கும் உடையினை உடுப்பு என்று வழங்கும் மரயும் தென் தமிழ்நாட்டில் வழக்கிலுள்ளது. இதனால், மரபுத் தொடர்ச்சி வுடன் பொதுப்பொருட் பேற்றினையும் இது அடைந்தமைப் புறப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/38&oldid=1498846" இலிருந்து மீள்விக்கப்பட்டது