பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழர் ஆடைகள் 2. ஆடை சங்க காலம் முதல் காணப்படும் சொல் இது. 1. உடம்பை அடுத்திருப்பதால் ஆடை என்ற பெயர் பெறும்." 2. அடை என்றால்இலை அடையைத் தைத்து உடுத்தினர். அது ஆடையாயிற்று.' 3. தமிழோடு இயைபுடைய தெலுங்கு மொழியில் இச் சொல் மீஅடை என்று வழங்கப்படுகின்றது. ஆதலின் ஆடை, உடைக்குக் காரணக் குறியாயிற்று' என்ற பல எண்ணங்கள் ஆடையின் சொல்லாக்க நிலை கருதி எழுந்தன. இவற்றுள் உடம்பை அடுத்தலால் ஆடை என்னும் கருத் நிற்கே இலக்கியச் சான்றுகள் துணையாகின்றன. 1. சங்கப் பாக்களில் உடை என்ற பொருளில் ஆடை என்ற சொல் பயிற்சி பெறுகின்றது. உடம்பை அடுத்தல் காரணமாகத் தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதற்கு உரிய அரணாக இக்- கருத்து அமைகிறது. 2. தமிழரைப் பொறுத்தவரை முதல் ஆடை தழையே. எனவே அடையில் பிறந்த ஆடையே அதிகச் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். ஆயின் உடைக்கே அதிக செல்வரக்குக் காணப்படுகிறது. 3. அடை ஆடைக்குரிய காரணம் எனின் மிகுதியான பயிற்சி பெறும் தழையினையும் ஆடை என்று புலவர் ஓரிடத்திலாவது கட்டிச் சென்றிருப்பர். ஆயின் ஓரிடத்தும் தழை ஆடை என்ற குறிப்பில்லை. 4. அடுத்தல் என்ற வினைளயத் தவிர பிற வினைகள் இதற்ல்ல்லை. 7. தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்-அ.மீராமுகைதீன், தமிழியல், டிசம்பர், 1974, பக்கம். 90. 8. தமிழர் ஆடைடாக்டர்திருமதி தே. தியாகராசன்,தாமரைச் செல்வர் வ. சுப்பையாபின்னை பவளவிழா மலர், பக்கம்.100. 9. தமிழகும் ஆடையும்-வீ., உலகவூழி தமிழ்ப் பொழில், தொகுதி-5,1929-30, பக்கம், 41.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/39&oldid=1498847" இலிருந்து மீள்விக்கப்பட்டது