பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடைபற்றிய சொற்கஸ்-ஓர் ஆய்வு 29 என்ற பாடல், தலைவன் தழை கொடுக்க, தலைவி அதனைத் தாய்க்கு அஞ்சி மறுப்பதை இயம்புகின்றது. தழையுடையின் மாறுபாடு இதனால் தெளிவுறுகின்றது (இக் கருத்திற்கு ஏற்ற தொரு பாடலை தஞ்சைவாணன் கேரவையும் நல்குகின்றது. மல்குற்ற தண்புளவ் குழ் தஞ்சைவாணன் மலய வெற்பா தங்குத் தவையிந்த நாட்டுள வன்மை வினன்லுதவாள் அங்குற் றடத்தெமர் கண்டால் அயிர்ப்பர் அதுவுமன்றிப் பல்குற்றமும் வகுமான் யாங்கள் வாங்கும் பசுந்தழையே .($8) ஈண்டும் தழை மாறுபாடு கருதி, பாங்கி தழையீனை மறுக் கின்றாள்). தழையுடைகளைப் பற்றிய மற்றுமொரு சிறப்பு, இதன் மெல்லியு இயல்புக்கேற்ப மெல்லியலார் மட்டுமே உடுத்திக் கொண்டமையாகும். ஐந்நில மகளிரும் இதனை உடுத்தித் தங் களை வளப்பாக்கிக் கொண்டனர் (அகம். 7, 156, 348, ஐல், 147, கலித், முல், 2), சீவக சிந்தாமணி வேட்டுவ மகளின் உடையாக இதனைக் காட்டும் (1231). விழவு, வழிபாடு, நீராட்டு, விளையாட்டு,விற்பனை போன்ற பல பொழுதுகளிலும் இதனை மகிழ்வுடன் ஏற்றனர் (அகம், 201, 320, ஐங், 73, குறும். 295, த.ம். 80). மகனிரிலும் இளைய மகளிரே இதனை உடுத்தினர். முதியோர் தழையுடுத்தியதாகச் சான்று இல்லை. வனவே ஆடை பற்றிய பிற எண்ணங்களிருந்தும் இதனை உடுத்தலுக்குப் பஞ்ச மன்று; யாசமே காரணம் எனக் கருதுதல் பொருந்தும். முதியோர் அணிவது நாகரிகமின்மையாகக் கருதப்பட்டிருக்கலாம். இன்று நாட்டுப்புறங்களில் இளைய மானீர் புடையை கட்டிக்கொள்ள முதியோர் கண்டாங்கிச் சேலைகளை அணிவது போன்றதொரு நிலையாக இதனைக் கொள்ளலாம். அனைத்துச் சான்றுகளும் இடையாடையாகக் காட்டும் இதனை, உடையின் மேல் உடுத்தீனரா அல்லது தனியே ஏற்றனரா என்ற எண்ணம் தெளிவாக இல்லை. ஆயின் ஒரு பாடல் 'அங்குழைத் தழையிறும் உழையிற் போகான்' (குறுந் 291) என்றுரைக்கின்றது. உடலோடு தெழுங்கியமையும் தழை வினைக் காண இதனை மட்டுமே அணியும் வழக்கு இருந்ததோ என்ற எண்ணம் எழுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/42&oldid=1498749" இலிருந்து மீள்விக்கப்பட்டது