பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 தமிழர் ஆடைகள் இவ்வாறு சங்கப் பாக்களில், சிறப்பாகச் சாற்றப்படும் தழை யுடைகள் பின்னர் அதிகமாகிப் பயன்படுத்தப்பட்டதாகத்தெரிய வில்லை, மானியின் மனமாற்றம், பிற துணிவகைகளின் செல் வாக்கு, நீண்ட கால உழைப்பின்மை காரணமாகத் தன் மதிப் பினை இழந்திருக்கக் கூடும். எனினும் இதன் மரபு இன்றும் தொடருகின்ற ஒன்று என்பதனை, பசுந்தழையும் மரவுரியும் இசைத்திடவே உடுப்போம் என்ற பொதியமலைக் குறவஞ்சியின் பாடலால் அறிகின்றோம். 4. நாருடை தொன்று தொட்டு இன்றுவரை மாந்தர் ஆடை வரலாற்றில் பங்குபெறும் பாங்குடையது நாருடைகள், மரனாகுடுக்கை, சீரை, பக்கு, நார்ப்பட்டு, நார்நூல், வெண்டுகில், சீரம், வற்கலை என்ற பல சொற்கள் இதனைக் குறித்தமைகின்றன. இச் சொல்லாட்சி களுன் சீரை, பக்கு, சீரம், வற்கலை தவிர ஏனையவை தன் பெயரிலேயேவிளக்கம் அளிப்பன. சீரம், சீரை மரவுரியைக் குறித்தல் உரையாசிரியர்களின் உரைதரும் விளக்கமாகும். பக்கு-நாருடுக்கை என அசுராதி கவீவின்றும் தெரியவருகின்றது.18 வற்கலை-வர்க்களா என்ற வடமொழியில் திரிபு என உரைப்பூர் (கம்ப. ஆரணிய. 241} சீரையின் திரிபே சீரமாகும். சங்க இலக்கியத்தில் சீரை, பக்கு, மரனாகுடுக்கையும் மரவுரியுடை மணிமேகலையிலும், பெருங்கதையில் நார்நூல் வெண்டுகிலும். கம்பளில் சீரம், வற்கலை என்ற புதுச் சொற்களும் அமைகின்றன. குறவர் (தற். 64), முனிவர் (திருமுருகு. 126), புலவன் (புறம் 194), விருச்சிகன் (மணி. 17:28), விரிடுகை (பெருங். 2:15:40) வேட்டுவன் (பிந்தா, 1231) போன்றோர் மரவுரியுடைபினை உடுத்தியோராகக் காட்டப்படுகின்றனர், இரையினைப் பற்றிய அநிகமான எண்ணங்களைக் கம்பன் காவியம் காட்டும். இராமன் முதலிய மூலகும் வளம் செல்லும் போதுைேர உடுத்திச் செல்கின்றனர் (1843), ஜூட்டன் (659)* 13. பக்கு - Duter bark of a tree; மரப்பட்டை · Lexicon Vol. IV, Part-1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/43&oldid=1498747" இலிருந்து மீள்விக்கப்பட்டது