பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 தமிழர் ஆடைகள் ஆயின், சீசையினின்றும், சீலை மருவியதைவிட, சேவை யிலின்றும் சீலை திரித்திருக்கக் கூடும் என்பதற்கே சான்றுகள் அமையக் காஸ்பின் றோம் எவ்வாறு என்பதைக் காணவாம். 1. சீரை, சீவை என்ற இரு சொற்களையும் கம்பண் வேறு பட்ட பொருட்களில் கையாண்டுள்ளான், (அ) ஊரை நூறுங் கருங்கனலூட் பொதி சீரை தூறவை சேமம் செலுத்துமோ -கம்ப. சுந்தர. 1144. என்ற பாடலில் சீரை என்ற சொல், பயிற்சி பெறுகின்றது. (ஆ) இராவணன் முன்னிலையில் சேலையாற் செய்யவாய்ப் புதைத்த செய்கையனாக யமன் காட்டப்படுகின்றான் (ஆரணிய. 570). இவ்விரு எண்ணங்களையும் காணப் பொருள் மாறுபாடு தெளிவாகும். 1. துறந்தாரின் உடையாகக் காட்டப்படுவது சீரை; சீலை யமனின் உடையாகக் காட்டப்படுகின்றது. 2. இலக்கியப் பயிற்சிகளைக் கொண்டு நோக்க, யமனின் சேலை இடையாடை என்று உரையாசிரியரால் கட்டப்படினும் அது மேலாடையே; இடையாடை கொண்டு வாய்புதைத்தல் பொருந்தாது: ஆடவர் மேலாடை அணியும் வழக்கு, தமிழரீடம் இருந்தமையும் இதனை உறுதிப்படுத்துகின்றது. ஒரே இலக்கியம் கட்டும் இரு பொருட்களையுடைய இரண்டு சொற்கள் தொடர் புடையதாக இருக்க இயலுமா என்பதும் எண்ணுதற்குரிய ஒன்று. இந்நிலையில், சீரை, சீலை இரண்டும் மாறுபட்டு அமைய சேலையினின்றும் சீலை உருவாகியிருக்கக் கூடும் என்பதற்கும் ஒரு சில எண்ணங்கள் அரணாகின்றன. 1. பெருங்கதை சேலம் என்ற ஆடையினைச் கட்டுகின்றது (4.12:97). எனவே சேலம் சேலை என்றாகி சீலை என்று திரித் திருக்கலாம். 2. கண்வடிவம் எழுதப்பட்ட ஆடையினைக் கண்டாங்கி என்று அழைத்தாற்போன்று (இன்று மகளிரின் சேலையினைப் பொதுவாகக் கண்டாங்கி என்பர்) சேவ் வடிவம் எழுதப்பட்ட தன் காரணமாக துணி, சேலை என்று வழங்கப்பட்டிருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/45&oldid=1498741" இலிருந்து மீள்விக்கப்பட்டது