பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 33 சேலை - சீலை மாற்றம் இயல்பானது. எனவே சீரையில் நிசிபே சீலையாகும் என்பது மீண்டும் ஆராய்வதற்குரிய ஒன்று. 5.துகில் சங்க இலக்கியத்தில் தழைக்கு அடுத்தாற்போன்று மிகுதி யாகப் பயின்றுவரும் தன்மையது துகில். பின்னைய இலக்கியங் கலிலும் இந்நிலை தொடடுகின்றதைக் காண்கின்றோம், இந்தியாவின் வடபகுதியிலும் தல் பற்றிய எண்ணங்கள் காணப்படல் எம்மொழிச் சொல் இது என்னும் ஐயத்திற்கு இடமாகின்றது.' அறிஞர் கருத்துகளும் போதிய விளக்கத்தை அனிக்கவில்லை. ஆயின் தமிழ்ச்சொல்லாக இருக்கப் பல சான்று கள் உள. 1. துகில், துயில் என்றும் துகின் என்றும் ஒரு சில இடங்களில் வழங்கப்படுவதை இலக்கியங்கள் கட்டுகின்றன. இவற்றுள், துயில் என்பதன் பகுதி, 'துப்' என்பது. பஞ்சின் மெல்லிய பகுதியும் துவ் என்று வழங்கப்படும். எனவே பஞ்சின் மேல்லிய பகுதியைக் கொண்டு உருவாக்கப்பட்டதால், துயில் என்ற பெயர் அமைந்தது என்பது பொருத்தமானதாகும். இதுவே துகில் என்றும், துகின் என்றும் வழங்கப்பட்டது. மிகவும் மெல்லியதொரு பகுதியாக, இலக்கியங்கள் துகிலினைக் காட்டுவதையும் இதனுடன் இணைத்து தோக்கலாம். 2. துகிலாய்ச் செய்கைப் பாவிரித்தன்ன (அகம். 269) என் னும் எண்ணத்தைச் சங்க இலக்கியத்தில் காணாம். துவொய்ச் செய்கை என்னும் தொடர் நெய்யும் தொழிலை விளக்குமாற் றான் இத்துயிலுக்கும் தமிழருக்குமுகிய தொடர்பும் வீனக்கமுறு இன்றது. 17. "Another interesting word is dugalla or Sanskrit dukula which was a fine steff though its exact nature has not been defined. In the Arthasastra it is mentioned in Bengal which was either made of cotton or cotton and silk mixed. The Divyavadana says that cloth was woven of fibre and wool mited together....The medieval lexicoas are also not very clear abost its exact meaning." -Costumes Textiles Cosmetics & Coiffure, Dr. Moti Chandra, page-115.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/46&oldid=1498740" இலிருந்து மீள்விக்கப்பட்டது