பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 39 தொடங்கும் பாடலிலும் சாதாரண ஆடை என்ற பொருளே இதற்கமையின்றது. எனவே பிற உள்நாட்டுத் துணியின் மதிப்புக் காரணமாக,"படிப்படியாக இதன் மதிப்புத் தமிழரிடம் குறைந்து விட்டமை புலப்படுகின்றது. கலிங்கம் பற்றிய பயிற்சிகள், இதனை நூலாலும்,பட்டாலும் ஆகியதாகக் காட்டுகின்றன. நேர் கரை நுண்ணூற் கலிங்கத்தைப் புறம் கட்ட (392),நூவாக் கலிங்கத்தை வாலரையில் கொள்ளும் தன்மையைப் பதிற்றுப்பத்து இயம்பும் (2:2). நூலாக் கலிங்கம்- நூற்காத நூலால் ஆகிய கலிங்கம் என்னும் பொருளில், பட்டு நூல் என்னும் எண்ணத்தைத் தந்து நிற்கின்றது. கலிங்கம்' பல நிலைகளில் பயன்பட்டமையை, கழுவுது கலிங்கம் கழா.அதும.இ - (உடைவாக) குறுந். 167. முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ - (போர்வையாக) புறம்.136. காடி கொண்ட எழுவுறு கலிங்கத்துத் தோடமை தூமடி விரித்த சேக்கை -(விரிப்பாக) நெடுதல் 134-5. போன்ற பல காட்டுகள் விளக்குகின்றன. இன்று கலிங்கம் என ஆடையைச் சுட்டல் இல்லை. அறுவை அறுஎன்ற விளைடியிற் தோன்றிய சொற்களுள்அறுவையும் ஒன்று. சங்க இலக்கியத்தில் கலிங்கத்திற்கு அடுத்த நிலையில் பயிற்சி பெற்ற அறுவை, பிறஇலக்கியங்களில் அதிகமாகச் சுட்டப் படவில்லை. பிற திராவிட மொழிகளிலும் அமைவது இச்சொல், கள்ள டம் துணியையும், துளு,தெலுங்கு இரண்டும் பழந்துணியைக் குறிக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றன. 22. Ta: aguvai- cloth, garment. Karaga, agave, agive, aruve = Cloth. Tu: arve - a cloth, old rag. Te : Aga + Tag+ - A Dravidian Etymological Dictionary, No. 268.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/52&oldid=1498597" இலிருந்து மீள்விக்கப்பட்டது