பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் ஆடைகள் அறுவை என்ற சொல்லுடன், இலக்கியப் பயிற்சியும் இதன் பொருளான துணியினின்றும் அறுத்து எடுத்துப் பயன்படுத்தின தன்மையை யுணர்த்துகின்றது. அரவுமீ (பொருநர். 82-3) காம்பு சொலித்தல் (சிறுபாண். 236) அருவி (புறம். 154) குருகின் தூவி (நற். 70) போன்றவற்றுடன் உவமிக்கப்படும் நிலையிலும் உவமை 'யாகும் நிலையிலும் சிறந்ததொரு ஆடையாகத் திகழும் அறுவை, ஒருசில இடங்களில் சாதாரண ஆடையையும் ஈட்டுகின்றது (சீவக. 2010). ஆடையைக் குறிக்கும் பொதுச்சொல் இது என்பது இதனால் தெளிவாகின்றது. ஆடை வணிகன் அறுவை வணிகன் எனப்படுதலும் (குறுந் 183, த×, 33) தறுமடி செறிந்த அறுவை வீதியைச் சிலப்பதிகாரம் சுட்டலும் (14:207) வண்ண வறுவையர் வளத்திகழ் மறுகினை. மணிமேகலை காட்டலும் (28:53) பெரிய புராணம் அறுவையர் குலமென தெசவாளரைக் குறிப்பிடலும் (நேச. நாய-2) இக் கருத்த தினை உறுதிப்படுத்த வல்லன. 'அறுவையை' அறுத்து எடுத்துப் பயன்படுத்தினர்" என்பதிற் இணங்க, தலையில் கட்டும் துணியாக (அகம். 195) நிலத்தோயும் அளவிற்கு உடுத்திய உடையாக (பதி. 34:3) விரிந்த அறுவை மேல் வணையாக (நற்.40) தூ வெள்ளறுவை போர்வையாக (புறம். 28:) பயன்பட்டமையும் நாம் காண்கின்றோம். அறுக்கப்பட்டதால் அறுவை எனப் பெயர்பெற்ற இதனைப் போன்று, கிழிக்கப்பட்டதால், துணியினைக் கீழி என்றும் வழங்கி னர் (சீவக. 104, 1603). அறுவை, கிழி என்பன இன்று ஆடையைச் குறித்தல் இல்லை. 23. "Aruvai is a literary word whicb mans clotb. A specifie dimension cut out of a long cloth woven in the loom has been aptly called Aruvai." - Words and their Signilicance Dr. R, P. Sethupillai, Puge- 43.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/53&oldid=1498601" இலிருந்து மீள்விக்கப்பட்டது