பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 தமிழர் ஆடைகள் பண்டு தமிழர் பழந்துணியைக் குறித்து வந்துள்ளனர் என்பது புலப்படுகின்றது. பின்னர் கற்தை என்ற சொல்லாட்சியும் அமைந்தது, இவற்றுள் கந்தை என்ற சொல்லே இன்றுவரை மக்களீடம் பயின்று வ்கும் சொல்லாகும். கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்னும் எண்ணத்தில் இச் சொல் வழக்கினைக் காண்கின்றோம்.கூரம் சாசனம் 'பரமேசுவர வர்மன் சாளுக்கியரைத் தோற்கடித்தாள்; நூறாயிரம் வீரர் களுடன் வந்த விக்கிரமாதித்தன் ஒன்றியாய்க் கந்தையைப் போர்த்துக் கொண்டு ஓடினான்' என்றுரைக்கும் நிலை கத்தை யின் தாழ்வினைத் தெளிவாக்கும். கந்தை என்ற சொல்லுடன், கந்தல் என்ற சொல்லாட்சியும் இன்று உண்டு. சிதைந்த ஆடை என்னும் பொருளுடன் தொடர்புடைய தாக அமைவது துணி என்ற சொல்லுமாகும். 'துணி' என்ற சொல், சங்க காலத்தில் துண்டுபட்ட அனைத்தையும் குறித்தது. ஆயின், துண்டுபடுத்தப்பட்ட ஆஸ்டயைக் குறிக்குமிடத்தில் இவை சிறந்த துணியைச் சுட்டவில்லை. துணிச் தெர் என்றும் சிதவற்றுணி என்றும் சிதைந்த துணியையே கட்டுகின்றது. தந்திக் கலம்பசம் பாணவின் ஏழ்மை நிலையை, 'நெருநல் துணியரைச் சுற்றித் திரியும் தன்மையால் இயம்பும்(23), எனவே 'துணி' என்னும் சொல் துணிக்கப்பட்ட பொருளைக் குறித்ததுடன், இழிந்த ஆடையைக் குறிக்கவும் பயன்பட்டது என்பது தெரிகிறது. இன்றைய நிலையில், இது எல்லா வகைத் துணிகளையும் குறிக்கும் பொதுப்பெயராக, தள்னிலையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளது. 9. தானை உடையைக் குறிக்கும் இச்சொல் சங்கப் பாக்களில் இருந்தே பயிற்சி பெறுகின்றது. தாழ்தானை (கவித். நெய். 147), அரிவையறுதானை (பரி. 11), தாரும் தானையும் (புறம் 276), கொடுந்தானைக்கோட் டழகு (நாலடி - 131), நீலத்தானை (லெப். 16:201), பூத்துகிற் தானை (பெரும். 1:35:202), தானை வீக்கற விரித்து (வேக. 1086) 26. குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு —கா. அப்பாதுரை, பக்கம். 69.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/55&oldid=1498613" இலிருந்து மீள்விக்கப்பட்டது