பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு 71 என வகும் கோசிகத்தில் பயிற்சி, புத்தம் புதுமையாக விளங்கக் கூடிய நிலையில் சிறப்பான தொன்றாக இதனை இயம்புகிறது. இதனுடன், கவிசெய் கோசிகம் என்னும் தொடரும் (சீவக, 1673) கோகெத்தைப் பேழையில் வைத்துப் பாதுகாத்தனர் (சூளா. $70) என்பதும் இதன் மேன்மையைச் சட்ட வல்லன. கோசிகமொடு' (குளா. 870) என்றும் இயம்புவதும் இவ்லாடை யின் மதிப்பினை உயர்விக்க வல்லது. மேலும் தொல்காப்பிய சொல்லதிகார உரையில் தெய்வச்சிலையார் 'கொல்லவன் பட்டு உலவோ என்றால், கோசிகம் அல்லது இல்லை' (33) என்று காட்டியுள்ளார். எனவே பட்டாடையான கோசிகம், தமிழரால் விரும்பப் பெற்றதொரு ஆடைவகை என்பது தெளிவாகின்றது. 34. காம்பு பெரியாழ்வார் இருமொழி கட்டும் 'காம்பு' (1.1:8) 'என்ற ஆடையினைப் பிற இலக்கியங்களில் காணமுடியவில்லை. ஆயின், 'காம்பு சொமித்தன்ன அறுவை எனச் சங்க இலக்கியத்தில் கண்டோம். எனவே காம்பு போன்ற மிகவும் மென்மையான தொரு உடையினைக் காம்பு என வழங்கியிருக்கலாம். அகராதி இதனை ஆடைக் கரையாக இயம்பும்.* பட்டு என்ற எண்ண தும் உண்டு. 1 35. நேத்திரம் ஆழ்வார் பாகரம் தலைமுடியைச் சுட்டும் அழகிய ஆடை யாக இதனைச் சுட்டுகின்றது. நன்னேறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து (பெரி. திரு. 31418) வடநூலான தளசம்பு, 'நேத்திரம் அழகிய பட்டாடை; நிலநேத் திரமும் காணப்பட்டது; கஞ்சுகத்தை நேத்திராவில் செய்தனர். 60. காம்பு* ஆடைக்கரை Tamil Lexicon, Vol. II, part-1. 61. 'காம்பு சிறந்த பட்டுத்துணி" - சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள், பி.எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி, சனவரி, 1978.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/84&oldid=1498693" இலிருந்து மீள்விக்கப்பட்டது