பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 73 இன்று வடநாட்டு மொழியில் பெண்கனின் தோள்மேல் சென்று கீழே விழும் சேலையின் முனைப்பகுதியை 'நீன்' என்று வழங்குவர் என்னும் கருத்தும் உண்டு. சங்க இலக்கியத்தில் 'நீவீ' என்ற சொல் காணப்படினும் ஆடை என்ற பொருள் இல்லை. 'அருங்கடி அன்ன காவல் நீவி" (தம்.365) என்னும் இடத்தில் காவலைக் கடந்து என்னும் பொரு ளில் கடந்து என்ற பொருளைக் காண்கின்றோம். சிந்தாமணியில் 'நீவியிருந்தரன்'(1302) எனும்போது வருடியிருந்தான் என்பதைக் குறிக்கின்றது.இப்பொருண்மையே இன்றும் தொடர்கின்றது. கம்பனில் 'நீவி' ஆடை என்ற பொருளைத் தருறெது. தோலாடையினைக் குறித்து நிற்கும் தன்மையில் (ஆரணிய, 15) ஆடையின் பெயராக அமைகிறது. 'நீவியின் தழைபட கூடுத்த (சுந்தர. 413) என்ற நிலையில் கொய்சகம் வைத்து கூடுத்திய ஆடையைக் காணலாம். இவற்றை நோக்க, 'தீவி' என்ற சொல் 'கடந்தது' என்ற பொருளில் ஆடைக்குரிய சொல்லாகியிருக்கலாம் எனத்தோன்று கிறது. வடமொழியில் உள்னாடையை முதலில் குறித்தும் (மேலாடையைக் கடத்து நிற்றல்) பின்னர் தோவீனைக் கடந்து திற்கும் முந்தானையைக் குறித்தும் அமையும் நிலை இதனை உறுதிப்படுத்தும். வடநாட்டுத் தொடர்பு காரணமாக,"" சம்பர் 'நீவியின் தழை பட உடுத்தமை எண்ணி', தமிழர் உடுத்திய ஆடையையும் நீவி என்று வழங்கியிருக்கக் கூடும். இன்று இப் பெயர் ஆடையைச் சுட்டல் இல்லை. 37. கலை ஆடையைக் குறிக்கும் இச்சொல்லின் பயிற்சி, பிற்கால இலக்கியங்களில் அமைகிறது. கலை என்ற சொல் பற்றிய உணர்வு ஆதியிலேயே இருப்பினும் (சிலப். 17:35) ஆடை என்னும் பொருள் கம்பனில்தான் விளக்க முதுகின்றது. 66. சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி' செந்தமிழ்ச் செல்லி, ஜூன், 1973. 67. From the nivi having the praghata, the loose and long. unwoven fringe with tassels the other end was plaia and de corated with the tusa chaff ..... -Costume Textiles Cosmetics & Coiffure, Dr. Motlehandra, page-8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/86&oldid=1498702" இலிருந்து மீள்விக்கப்பட்டது