பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

இரண்டு மணிநேரத்துக்கு-ஒருமுறை வலப்புற மூக்கிலிருந்து இடப்புற மூக்குக்கும் இடப்புற மூக்கிலிருந்து வலப்புற மூக்குக்கும் சரம் மாறுகிறதெனவும் கூறப்பட்டுள்ளன. வலப்புற மூக்கில் நடப்பது இடகலை எனவும், வலத்திலிருந்து இடப்பக்கம் மாறுவதற்கு இடையில் இரண்டு மூக்கிலும் கொஞ்ச நேரம் மூச்சு நடப்பது சுழிமுனை எனவும் இடப்பக்கம் நடக்கும்போது பின் கலை எனவும் வலப்பக்கம் நடப்பது சூரிய கலை வெப்பநாடி எனவும், இடப்பக்கம் நடப்பது சந்திர கலை தட்ப நாடி எனவும் கூறுவர்.

மூச்சு இயங்கும் வகையைக் கொண்டே இன்ன நோய் வரும் என்பதை முன்னரே அறிந்து ஆவன செய்துகொள்ளவும் நம் முன்னோர் அறிந்திருந்தனர் என்று தெரிகிறது. விஞ்ஞான வசதி மிக்க இந் நாளில் இன்னும் காணாத பல நுட்பமான உடம்பின் அமைப்புகளை எல்லாம் நம் முன்னோர் மிகப் பழைய நாளிலேயே கண்டிருக்கின்றனர். அவைகளை எல்லாம் புறக்கணிக்காது ஆராய்ந்து போற்ற வேண்டும். நம் புறக்கணிப்பால் எவ்வளவோ அரும் பெருங்கலை நூல்கள் அழிந்துவிட்டன.

இருக்கின்ற தமிழ்க்கலை நூல்களையேனும் திரட்டித்தக்க தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்ளத் தமிழ் மக்களும் ஆட்சியும் முனைய வேண்டும்.

வார சரம்

“வெள்ளி வெண்திங்கள் விளங்கும் புதன் இடம்
ஒள்ளிய மந்தன் இரவி செய்வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறைஇடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே”