பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

என்னும் திருமந்திரப் பாடலால் வெள்ளி, திங்கள், புதன் இக்கிழமைகளில் விடியற்காலம் ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் இடப் பக்கம் மூக்கில் சரம் (மூச்சு) நடைபெறும் எனவும், சனி, ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் வலப் பக்கம் மூக்கில் சுவாசம் நடைபெறுமெனவும் வியாழக்கிழமை மட்டும் சந்திரன் வளர்பிறை காலத்தில் இடப் பக்கத்திலும், தேய்பிறை காலத்தில் வலப் பக்கத்திலும் நடைபெறுமெனவும் அறிகின்றோம். பழைய நாளில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் மருத்துவர்கள் அதன்படி நடப்பதையும் கட்டாயம் கவனித்து வந்தார்கள்.

இப்போது நாமும் நம் மூச்சு இம்முறையில் இயங்குவதைக் காணலாம். மாற்றமிருந்தால் உடலில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அறிந்து, நுட்பமாக உடம்பைப் பரிசோதித்து நோய்வராமல் காத்துக்கொள்ளலாம். தமிழ் மருத்துவக்கலை நோய்க்கு மருந்து தேடுவதோடு நிற்காமல், நோய் வருமுன் அறிந்து காக்கும் முறைகளையும் நன்றாகக் கூறுகிறது. ஐந்து நாழிகைக்கு - இரண்டுமணி நேரத்துக்கு-ஒருமுறை நாசியில் வாசிமாறி மாறி நடைபெறுமென்று மேலே குறிப்பிட்டோம். வலப்புற மூக்குத் துளையில் சரம் நடைபெறுவதைச் 'சூரிய நாடி' எனவும், இடப்பக்கம் நடைபெறுவதைச் 'சந்திர நாடி' எனவும் குறிப்பர். வலப் பக்கம் மூச்சு நடைபெறும்போது இன்னின்ன வேலை செய்வது நலமெனவும், இடப் பக்கம் மூச்சு நடைபெறுங்கால் இன்ன வேலைகள் செய்ய வேண்டுமெனவும் கூறுவர்.

பழைய தமிழ் மருத்துவர்கள் திறம்

பழைய நாள் மருத்துவர்கள் பகல் இரவு சூரிய சந்திர நட்சத்திரங்களைப் பாராமலும், கடிகாரம் எனும் காலங்-