பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஆங்கு அமைதி நிறை பெருவாழ்வு வாழும் அவர்கள்,உன் அரசியல் விழிப்புணர்ச்சியில் இடம் பெறும் மறதி காரணத்தால்,கால்கள் நான்கே நாட்டப் பெற்றுத் தழை இட்டு வேயப் பெற்ற சின்னம் சிறு குடிசைகளில் வாழவேண்டியவராகி விட்ட பகைவர்போலும் வாழ்வினராகி வருந்த நேர்ந்துவிடாமல் பொருள்வேண்டி உன்னைத் தேடி வருவார்க்குத் தாமே தம் பொருள் அளித்து அவர்தம் வறுமை போக்கி வாழ்விக்கும் வளமார் வாழ்விலேயே என்றும் இருக்குமாறு நீன் அரசியல் முறைகளை வகுத்துக் கொள்வாயாக" என்று கூறிய அறிவுரையில், படைத்தலைவர்களை பேண வேண்டியதன் சிறப்பை அக்காலப் பாலவரும் காவலரும் பெரிதும் உணர்ந்திருந்தனர் என்ற உண்மை தெளிவுறப் புலனாதல் உணர்க.

"நெல்விளை கழனிப் படுபுள் ஒப்புநர்
ஒழிமிடல் விறகின் கழிமீன் சுட்டு
வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும் நின்படைகொள் மாக்கள்
பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்துக்,
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
சிறுமனை வாழ்க்கையின் ஒரீ இ வருநர்க்கு
உதவி யாற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்றக நின் செய்கை!"

ஆன்றோர்கள் கூறிய இவ்வறமுறையினை அக்கால அரசர்கள் அறிந்து மேற்கொண்டு வந்தார்கள். தன் பொருட்டுத் தன் இன்னுயிர் துறக்கவும் துணிந்திருக் கும் படை மறவர்க்குத் தன் தலைமாலையாம் பல்வேறு வடம் பொருந்திய மணி அவனுக்கு அணி வித்து, கழுத்திற்கிடக்கும் வடமாலையைத் தான்