பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

அணிந்து கொள்ளாத் தார்வேந்தர்களைத் தமிழகம் வண்டு பெற்றிருந்த காட்சியைப் புலவர்கள் பார்த்துப் பார்த்துப் பேரின்பம் கொண்டார்கள்.

"கொன்னும் சாதல் வெய்யோற்குத், தன்தலை
மணிமருள் மாலை சூட்டி, அவன் தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே."

என்ற நெடுங்களத்துப் பரணர் பாட்டினைக் காண்க.

தென்னவராசிய பாண்டியர் குடியில் வந்த பேரரசன் ஒருவன் தன் படையில் பணிபுரிந்த நாஞ்சில் பொருநன் என்பான் விரும்பும் பொருள்களையெல்லாம் தடையின்றித் தந்த சிறப்பையும், அதனால் அவன் பொருட்டுத் தன் உயிரையும் இழக்கத் துணிந்து நின்ற அப்பொருநன் பெருமையும் புலவர் மருதன் இளநாகனார் ஒரு சேர வைத்துப் பாராட்டியுள்ளார்:

"ஈதல் ஆனான் வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே."

கார் காலத்து மழைத் தாரைகள்போல் மளமள வென வந்து அம்புகள் தைப்பினும், வயலில் பிறழும் கெண்டை மீன்கள்போல் வேல்கள் வெள்ளொளி வீச வந்து பாயினும், பெரிய களிறுகளின் பரிய கோடுகள் வந்து மார்பில் ஊன்றினும் உயிர் ஓம்பற்பொருட்டு ஓடி ஒளியாது நின்று போர் உடற்றி வென்று மீண்ட வீறுடையார், நீர்நிலைகளில் விளையாடும் இயல்புடைய வாளை. மீன்கள், மனைகளின் முன்புறத்தே வரிசை வரிசையாக நிற்கும் நெற்கரிசைகளின் நிழவில் கிடந்து புரள்தற்கு இடமான வளம்மிக்க மருதநிலத்து ஊர் களைப் பரிசிலாகப் பெற்ற பேரின்பக் காட்சிகளையும் புலவர்கள் போற்றிப் பாராட்டியுள்ளார்கள்.

"கால மாரியின் அம்பு தைப்பினும்,
வயற்கெண்டையின் வேல் பிறழினும்"