பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

உன் பகைவர். அங்ஙன மாகவும், கிள்ளி! ஊரும் உலகமும் உன்னை மட்டும் புகழ்வானேன்? புலவர்கள் உன் புகழை மட்டும் பாராட்டிப் பாக்கள் புனைவானேன்? அது ஏனோ? அது எனக்கு விளங்கவில்லை.நான் அறிய, அதை நீ அறிவிப் பாயாக!" என்று கேட்டு, அவனைப் பழித்து, அவன் பகைவரைப் பாராட்டுவார்போல் அவனைப் புகழ்ந்து, அவன் பகைவரைப் பழிக்கும் அழகிய பாட்டொன்றைப் பாடியருளினார்.

"நீயே அமர்காணின் அமர் கடந்து, அவர்
படைவிலக்கி எதிர் நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை; கட்கு இன்னாயே;
அவரே,நிற்காணின் புறம் கொடுத்தலின்
ஊறு அறியா மெய்யாக்கையொடு
கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே.
அதனால், நீயும் ஒன்றுஇனியை; அவரும் ஒன்று இனியர்;
ஒவ்வா யாவுள? மற்றே. வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடிமான் கிள்ளி!
கின்னைவியக்கும் இவ்வுலகம்! அஃது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே."