பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தமிழர் தோற்றமும் பரவலும்


தொல் பழங்காலத்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவிய பண்பாடுகள் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆய்வு, தென் இந்தியாவில் உள்ள அமைப்புகளுக்கும் நாகரீகம் பெற்றிருந்த அன்றைய உலகின் ஏனைய பகுதிகளில் இருந்த அமைப்புகளுக்கும் இடையில் இருந்த இன உறவு, ஒருமைப்பாடுகளைத் தொடர்ந்து, நான் எடுத்துக்காட்ட இருப்பதுபோல், ஐயத்திற்கு இடனின்றி உணர்த்தும். இரண்டும் துல்லியமாக ஒரே மாதிரியாக இருக்கும் அந்த நிலைக்கு, ஒருவர்க்கொருவர் பரிமாறிக்கொண்டிருந்திருக்க வேண்டிய அடுத்தடுத்து மேற்கொண்ட தொடர்புகளையே காரணம் ஆக்குதல் வேண்டும். வேற்று நாட்டவர் பண்பாடு, நமக்கே உரிய நம் பண்பாடுகளுக்கு, ஊழிக்கு ஊழி தொடர்ந்து அதன் தனித்தன்மைக்கு - சென்னை மாநிலத்திலிருந்து வேற்று நாட்டில் குடிபோய் இருப்பவரிடையே, இன்றும் குறிப்பிட்டுக் காட்டுமளவு இடம் பெற்றிருக்கும் தனித் தன்மைக்கு எவ்வித ஊறும் விளைக்காத வகையில் வளப்படுத்தியிருப்பது இயல்பானதே. 1931ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி, 25 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில், அதிக எண்ணிக்கையில் இலங்கை, மலேயா, மாருதியஸ், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் வாழ்கின்றனர். அவ்வாறு சென்று வாழும், அச்சென்னைவாசிகள் பற்றி அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது; “குடும்பம் தாயகத்திற்குத் திரும்புதல், அவர்களிடையே பொதுவான இயல்பு. தங்கள் வீட்டோடும், மூதாதையர் வழிவந்த தங்கள் நில உடைமைகளோடும் நீண்ட தொடர்பு கொண்டுள்ளனர். சமய வழிபாடு போலும் தனக்கே உரிய அனைத்தையும், சென்ற நாடுகளில் சிறிதும் மாறுதலுக்கு உள்ளாகாமல் தொடர்ந்திருக்கும் வகையில் அவன் கொண்டுள்ளான். சாதி வேறுபாடு, ஐயத்திற்கு இடமில்லாமல் தளர்ந்தே உளது. என்றாலும், சாதி ஒருமைப்பாட்டின் பங்கு. எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் சிறிதளவே ஆம். எந்தச்