பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தமிழர் தோற்றமும் பரவலும்


கண்டெடுக்கப்பட்ட விலை உயர்ந்த அமேஸான் வகைக் கற்கள், நீலகிரிக்கே உரிய தனிச் சிறப்பு வாய்ந்த கற்களாம். இக்கண்டுபிடிப்புகளுடன், மொகஞ்சொதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட மைசூர் மாநிலத்திலிருந்து வந்திருக்கக் வேண்டிய, அழகிய பச்சைக் கல்லால் செய்யப்பட்ட நீர்குடிக் குவளையையும் இணைத்துக்கொள்க. இது, தென்இந்தியா, பித்தளை செப்புக் காலத்திலேயே, சிந்து வெளி நகரங்களோடு, நேரிடையாகக் கொண்டிருந்த தொடர்பினை உறுதி செய்யும். என் முதல் சொற்பொழிவில் குறிப்பிட்டது போல், ஊழிப் பெருவெள்ளம் விட்ட வண்டல் வடிவத்தில் கண்டெடுக்கப்பட்ட நீலகிரியைச் சேர்ந்த அமேஸான் வகைக் கற்களால் ஆன குமிழி, கண்டெடுக்கப்பட்ட சுமேரிய நாட்டு “உர்” (Ur) எனும் ஊரின் நிலையும் அத்தகையதே ஆதல் வேண்டும். (குறிப்பு:18) மன்னர் ஆட்சிக்கு முற்பட்ட எகிப்து, பச்சைக் கல்லைப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கதாம். “ராய்கிர்” (Raigir) என வழங்கப்படும் ஐதராபாத்திலும், கி.மு. 3500 ஆம் ஆண்டு காலத்திய, சுமேரிய நாட்டு “உர்” (Ur) எனும் இடத்திலும் கண்டெடுக்கப்பட்ட நீலக்கல்லால் ஆன, நீண்ட உருளை வடிவிலான குமிழ்களுக்கிடையே, வகையால் மட்டுமன்று, வேலைப்பாட்டு நிலையிலும் உள்ள ஒருமைப்பாட்டினையும் நான்குறிப்பிடுவேன். அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட “குவார்ட்ஸைட்டே” என்ற ஒருவகைக் கல்லால், முக்கோண வடிவில் செய்யப்பட்ட மணிமாலைகளும், தொல்பழங்கால எகிப்திய நாகரீகத்திற்கு நிகரானதாகும். கி.மு. 1600 ஆண்டு காலத்திய நாற்சதுர உருளை வடிவிலான, கிரீட்டன்மாதிரி மணிமாலையும், குவார்ட்லைட்டே என்ற ஒருவகைக் கல்லால் ஆன, ஆறுபட்டையும், பீப்பாய் வடிவமும் உள்ள மணிமாலையும் உர் (Ur) எனும் இடத்தில் கி.மு. 3500ஐச் சேர்ந்த புதைகுழிகளில் நமக்குக் கிடைக்கின்றன. கலைநுணுக்கம் வாய்ந்த இப்பொருட்களெல்லாம் ஆங்காங்கே,