பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

103


கானலாமா? தென்னிந்திய வரலாற்றாசிரியர் ஒருவர் இக்கருத்துடையவராவர். கிழக்கு ஆப்பிரிக்கா, மற்றும், தென்ஆப்பிரிக்கக் கிழக்குக் கரையை ஒட்டி உள்ள மடகாஸ்கரிலும், பழக்கப்பட்ட காட்டுக்கோழி காணப்படுகிறது. காட்டுக்கோழி பழக்கப்படுத்தப் பெற்ற காலமாம், பெருநிலப்பரப்பு கடலுள் ஆழ்ந்து போன, நிலஇயல் காலத்தை, நினைவூட்டுகிறது. இது, தமிழ்வேலன் குறித்த பழங்கதையில் சில அடிப்படையைக் கொண்டதாகும். (குறிப்பு:37),

இன்பக் களியாட்டங்கிளில், கோழிப்போர் தென்னிந்தியாவில் சிறப்பானது. மோகன்ஸாதரோவில் கண்டெடுக்கப்பட்ட தாயத்தின் மீதான முத்திரையில், இரு காட்டுக்கோழிகள் சண்டை இடுவதாகக் காட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து, திருவாளர் மக்கே (Mackay) அவர்கள், சிந்துவெளி மக்களிடையே, கோழிச்சண்டை, ஒரு விளையாட்டாம் எனக்கூறுகிறார்.

மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட ஆய்வு, முறையற்றதாக, மனம்போன படியினதாக இருப்பினும், அது தன்னளவிலேயே தென்னிந்தியப்பண்பாட்டின் அடிப்படை ஒருமைப்பாட்டை நிலைநாட்டவல்ல நல்ல சான்று ஆகும். கால அளவை, இடையறவு படாமல், குறித்து வைக்கிறது. அது தொடர்புகொண்ட, வெளிநாட்டுப் பண்பாடுகளில் மிகச்சிறந்தனவற்றைத் தன்னியலதாக்கும் அதே நிலையில் அது, இன்னமும் உயிர் ஓட்டம் வாய்ந்த ஆற்றலாகவே திகழ்கிறது. தொல்பழங்கால, இடைக்கால, மற்றும் இன்றைய உலகில் அதன் இடம் ஒப்புயர்வற்றது. சில சமயம் உலகத்தவர் கருத்தைக் கவரக்கூடியது. அது, தன் சமய நெறியாலும், மொழியாலும், தொல்பழம் உலகத்தை, அதன் கலையைக் கலைத்தொழிலை நாகரீகம் உடையதாக்கி உளது. இடைக்காலத்தில், அது தான் பெற்ற வெற்றியோடு தன் பண்பாட்டுப் பேரொளியைப் பரப்பிற்று. இன்றும் கூடச்