பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

145


தாய்க்கடவுளாம். சிரியாவில், ‘அஸ்டர்டெட்’ மற்றும், “தம்மூஸபு” (Astarte and Tammuz) என்பது, தன்னிலும் இழிந்ததான, ஆண் சூரியன் பணிபுரியத்தக்க, பெண் திங்கள் தெய்வமாம். (The Ancient History of the Near East. page: 207-8-8th Edition.)

28) பாபிலோனியர்களிடையே, “ஷமஷ்” (Shamash) எனப்படும் சூரியக் கடவுள், திங்கள் கடவுளின் மகனாகக் காணப்படுகிறது. சுமேரியாவில் யூபிரட்ஸ் ஆற்றின் கரையில் உள்ள நனிமிகப் பழைய “உர்” (Ur) நகரை ஆண்ட பண்டைய அரசன் சூரியக் கடவுளைத் திங்கள் கடவுளின் பெயர்களுள் ஒன்றான “நன்னர்” (Nannar) என்பதன் கால்வழி வந்ததாக அழைத்துள்ளான். பாபிலோனியாவின் பழங்குடி அரசர்களில் கடைசி அரசனாகிய ‘நபொனிடஸ்’ (Nabonidas) என்பான். அவனுக்கு அதே தந்தையை உரிமையாக்கி உள்ளான். ஆகவே முதல் அரசன் முதல், இறுதி அரசன் வரை, மதிப்பீட்டில் சூரியக் கடவுள், திங்கள் கடவுளுக்குத் தாழ்ந்தவனாகவே வரிசைப்படுத்தப்பட்டுள்ளான். அவனுடைய தாழ்நிலை வேறுவகைகளிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாபிலோனிய பண்டைய சமய நெறியில், ஞாயிறு வழிபாடு, திங்கள் வழிபாட்டிற்கு இரண்டாம் தரத்ததே என்பது ஒரு சிறப்பு இயல்பாம். (திருவாளர் ப்ரேஸ்ர் அவர்களின் “இயற்கை வழிபாடு” (The Worship of Nature) என்ற ஆங்கில நூலைக் காண்க. பக்கம் 530-531).

29) பாபிலோனிய மண்ணிலும், பழங்கதையிலும் ஏப்ருமொழி சமய இலக்கியங்களோடு, ஐயத்திற்கு இடம் இன்றி ஒத்துப்போகக் கூடியன பல உள்ளன. அவ்வொருமைப்பாடு, பாபிலோனியப் பண்பாடுகள், பழங்காலத்திய இஸ்திரேலிய நடனம் கேனனுக்குப் பரவி, தொடக்காலத்திலிருந்தே தொடர்ந்து பெற்றிருந்த