பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

3



குறிப்பிடத்தக்கது. கடல் கோள்களைச் சார்ந்த கற்பனைக் கவிதைகள் இந்நாட்டிற்குப் புதியன அல்ல. (அடிக்குறிப்பு-2 காண்க) பண்டை உலகத்தின் மற்ற நாடுகளைப் பற்றிக் கூறத் தேவையில்லா நிலையில், ஈப்ரு பாபிலோனியா மற்றும் சுமேரியா நாடுகளில், இதுபோலும் கற்பனைக் கூற்றுக்கள் உள்ளன. நிலஇயல் நூல் அறிவு ஐயத்திற்கு இடம் இன்றி ஆராயப்பட வேண்டியவை ஆதலின், இதுபோலும் கற்பனைகளை ஒட்டு மொத்தமாகத் தள்ளிவிடாமல், அவையும் சில வரலாற்று மரபின் அடிப்படையில் எழுந்தன என்றே கொள்ளுதல் வேண்டும். வேறோர் இடத்தில் பாபிலோனியக் கற்பனைகளுக்கும், இந்தியக் கற்பனைகளுக்கும் இடையில் பொருந்தத்தக்க ஒற்றுமை இருப்பதைக் குறிப்பிட்டுள்ளேன். கடல்கோள் குறித்து மெசபடோமியக் கற்பனைக் கதை ‘மீன்', ‘நீர்’ ஆகிய இரு சொற்களை அழிவுறாமல் பெற்றுள்ளது என்பது வியப்பிற்கு உரியது (Census of India 1931 page 366) (அடிக்குறிப்பு 3 காண்க.)

நிலநூல் சான்றுப்படி, நனிமிகப் பழங்காலப்பாறைகள், அவை தக்கிண மலைச் சரிவுகளாயினும், அல்லது, தென்னாட்டுப் படிக்கல் பாறைகளாயினும், உலக அரங்கில், நனிமிகப் பழங்காலத்தே தோன்றிய நிலப்பரப்பாகிய இந்தியத் தீபகற்பத்தில் காணப்படுகின்றன. நீலகிரி, பழநி, ஆனைமலை ஆகிய மலைகள் தொல்லூழிக் காலத்தைச் சேர்ந்தனவாகக் கருதப்படுகின்றன. தென் இந்தியப் பழங்கற்கால (Paleolithic) மனிதன், காடுகளில் வாழவில்லை; மாறாக மலைநாட்டுச் சமவெளிகளிலேயே வாழ்ந்தான் என்பது வல்லுநர்கள் கருத்து (குறிப்பு 4 காண்க.) அவன் மற்ற நாட்டுப் பழங்கற்கால மனிதனைப்போல, அறவே காட்டுமிராண்டி அல்லன். ஆகவே, தென் இந்தியர், பழங்கால மனிதனுக்கும் முற்பட்ட நனிமிகப் பழங்கால அம்மண்ணுக்கே உரிய மக்களைக் கொண்டதாதல் வேண்டும். பின்வரும்