பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தமிழர் தோற்றமும் பரவலும்


காரணமாகிறது. ஆகவே, “தமிழ்” என்ற பெயர், தமலிட்டி என்ற சொல்லின் சுருக்கமாகக் காணப்படுகிறது. வாயு மற்றும் விஷ்ணு புராணங்கள், கோசலர், மற்றும் ஒட்டர்களோடு தம்ரலிப்தரர் (Tamraliptas) களை, வங்காளம் மற்றும் அதை அடுத்த கடற்கரை நாடுகளில் வாழ்பவர்களாக, மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன.

7) “Historian's History of the world” Vol. 1. P. 77, மற்றும் ஜி ஸ்லேட்டர் அவர்களின் “Dravidian Culture” Page : 22 ஆகிய நூல்களைக் காண்க. “பதரி” (Badari) என்பதுதானும் இந்திய நாட்டு, ஓர் இடத்தின் பெயராம்.

8) தென் இந்தியக் காடர்களும், உரலிகளும், இலங்கை வெட்டர்களோடும், செலெபெஸ் (Celebes) நாட்டு த்பலஸ் (Tfalas), மலேயத் தீபகற்பத்தைச் சேர்ந்த “ஸ்கைஸ்” (Sakais) ஆகிய மக்களோடும் குறிப்பிடத்தக்க ஒருமைப்பாடு கொண்டுள்ளனர். (Macctt Anthropology P. 120) ஆஸ்திரேலியா, அவர்களின் தாயகமாகக் கருதப்பட்டது. அண்மைக்கால எழுத்தாளர் ஒருவர், பாலஸ்தீனியத் தாயகத்தைக் கூறுகிறார். நிகழ்ச்சிகள், அவர்கள் தென் இந்தியாவைச் சேர்ந்த, புதுக்கற்காலத்தவராகிய திராவிடர்களாம் எனக் காட்டுகின்றன. அவர்களை, இந்தியத் தீபகற்பத்தின் தொடக்ககால வாழ்வின ராகிய காடர் போலும், தொல் பழங்காலக் காட்டு வாழ்வினரின் அறவே வேறுபட்ட ஒரு கூட்டமாகக் கொள்வது நனிமிகக் கடினம். (திருவாளர் எல்.ஏ. கிருஷ்ண அய்யர் அவர்களின், ‘திருவாங்கூர் நாட்டு பழங்குடியினரும் சாதிகளும்’ (Travancore Tribes and Castes Vol. P. 292-3) என்ற நூலினைக் காண்க. .

9) திருவாளர் எச்.ஆர். ஹால் (H.R. Hall) அவர்களின், “அண்மைக் கிழக்கு நாடுகளின் பண்டை வரலாறு” (The Ancient History of the Neảr East) என்ற நூலின் 173 மற்றும் 174-212 ஆகிய பக்கங்களைக் காண்க.