பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

53



அடுத்துப் படையெடுத்து வந்த தமிழ் இனத்தவர், கடல் அரசர் எனும் பொருள் தரும் திரையர் ஆவர். அவர்கள் பெரிய கடலோடி இனத்தவர். அவர்களின் தாயகம் வங்கத்தின் தாழ்பகுதி. அவர்கள் கடல் வழியாகப் பர்மா, தென்சீனக் கடலைச் சார்ந்த கொச்சின் சைனா, இலங்கை, தென் இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்றனர். இவ்வினத்தைச் சேர்ந்தவனும், இன்றைய காஞ்சீபுரமாம் கச்சியை ஆண்டவனும், கரிகால் சோழனின் சம காலத்தவனும் ஆகிய திரையன் என்பான். இந்துப் புராணங்களின்படி, கடலைப் படுக்கையாகக் கொண்ட விஷ்ணுவின் வழிவந்தவனாவன்.

தமிழர்களின் மற்றொரு பிரிவினர் கடவுட்டன்மை வாய்ந்தவர் எனும் பொருள் உடையதான ‘வானவர்’ என்பவராவர். அவர்கள் அகச்சான்றுகளின்படி வடக்கு வங்காளத்து மலைநாட்டு இனத்தவரே. இவ்வினத்தைச் சேர்ந்த சேர அரசர்கள். தங்களை வானவர் என்றே அழைத்துக்கொண்டனர். அவர்கள், இமாலயத்துக் குடிவாழும் இனத்தவரோடு உறவு கொண்டாடினர். தங்களின் அம்மூலத்தை வெளிப்படுத்த வானவரம்பன், இமயவரம்பன் எனும் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர். சேர அரசர்கள் அல்லாமல், முதிரமலைத் தலைவனும் நன்னன் போலும் மலைநாட்டுத் தலைவர்களும், அழும்பில் வேள்முதலானோரும் தங்களை வானவர் தலைவர் எனும் பொருள்தரும் வானவிறல்வேள் என அழைத்துக்கொண்டனர்.

திருவாளர் கனகசபை அவர்களின் மேலே கூறியுள்ள கருத்துகள், அவர் இது எழுதிய பின்னர்ச் செய்த ஆராய்ச்சி முடிவுகளின்படி ஏற்றுக்கொள்ளக் கூடாதனவாம். இக்கருத்தோடு முற்றிலும் மாறுபட்ட முடிவினை மேற்கொண்ட திருவாளர் ஜூலெஸ் வின்சென் (Jules Vinsen) அவர்களின் கருத்து அறிய,