பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

59



கலந்துவிட்ட திராவிடக் குடிவாழ்நர், நனிமிகத் தொடக்க காலத்தில் நெக்ரிட்டோ இனத்தவரோடு கலந்துவிட்டனர். இக்கலப்பால், தோன்றிய அவர் வழிவந்தவர்கள், இன்று தென்இந்திய மக்களிடையே காணலாகும், தமக்கே உரிய உடல் அமைப்பை இயல்பாகவே பெற்றுக்கொண்டனர். குள்ள உருவம், நனிமிகக் கறுத்தமேனி (ஆமெடியர்களின் மேனிக் கறுப்பு போன்றதன்று). தட்டையான மூக்கு, சுருண்ட தலைமயிர் கி.மு. 1500 ஆண்டளவில், ஆரியர்கள், இந்தியாவுக்குள் நுழைந்தபோது, இருக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்ட தாலர் அல்லது தஸ்யூக்களாம். தங்கள் பகைவர்களிடையே, மேலே கூறியன போலும், தாம் முன்பு கண்டறியாத இயல்புகளைக் கண்டனர். இருக்கு வேதப் பாடல்களில் அவர்களை மூக்கற்றவர்கள் எனக் கூறி, அவர்களின் இழிவான அருவருக்கத்தக்க நிலைகளைச் சுருக்கமாக, ஆனால் தெளிவாகக் கூறி வைத்தனர். (New Review September. 1941).

19) அமரர் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், தென்னிந்திய மக்களின் பண்பாடு, மற்றும் இன இயல்புகள், தொல்லூழி காலம் முதல் இடையறவு படாமல் தொடர்ந்து வருவது என்ற கொள்கையை நிலைநாட்டும் நல்ல ஆர்வமிக்க முனைவராவர். ‘தென் இந்தியாவில் பழங்கற்கால நாகரீகம், பையப்பைய முடிவுற்றுப், புலனால் அறியப்படாநிலையில், புதிய கற்காலத்தால் மறைந்து ஒளிகுன்றி விட்டது. பழங்கற்காலம் முடிவுற்று அடுத்த பாகம் தொடங்கும்போது, பேரழிவு விளைவிக்கும் இயற்கை நிகழ்ச்சியை உணர்த்தும் நிலஇயல் சார்ந்த அல்லது வேறுவகையான குறிப்பு எதுவும் இல்லை. பொன்கலந்த மென் பாறைகளுக்குப் பதிலாகக் கடினப் படிக்கல் பாறைகளை மேற்கொண்டது, படிக்கல் பாறையால் செய்யப்பட்ட, கருவிகள் தளவாடங்களைத் தொட்டால் நனிமிக மென்மை தரும்