பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தமிழர் தோற்றமும் பரவலும்


அமெரிக்காவுக்கும் இடையே நேரிடைத் தொடர்பு இருந்ததைக் காட்டுகிறது. வடஅமெரிக்காவில் ஐக்கிய நாடுகளுக்குத் தெற்கில் உள்ள மெக்ஸிகோ நாடு, இந்திய சமுதாய மற்றும் சமயங்கள் சார்ந்த நம்பிக்கைகைள் சிலவற்றை இன்னமும் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. (குறிப்பு. 10)

தொலைதூர இந்தியா எனப்படும், இந்தோசீனாவில் உள்ள சுவர்ண பூமியை, ஜாதகா கதைகள் குறிப்பிடுகின்றன. இந்தத் தீபகற்பத்தில், தென்னிந்தியர்களின் செயல்பாடுகளைப், பெரிபுலுஸ் குறிப்பிடுகிறது. புகார் அல்லது காவிரிப் பூம்பட்டினம், அதற்கு ஈடான பெருத்த வாணிக நிலையம் ஆகும். பட்டினப்பாலை குறிப்பிடும் “காழகம்” என்பது, தென்கிழக்கு சுமத்ரா நாடாகிய பூரீ விஜயப் பேரரசில் உள்ள ஒருநாடாம் “கட்ஹா” (Kataha) என்ற நகராக அடையாளம் காணக்கூடும். இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தொண்டி, மதிக்கத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஒரு பெருவாணிப நிலையமாம். ஜாகாவில், பல்லவர் காலத்து எழுத்துக்கள் ஆளப்பட்டிருந்தமைக்கான உறுதியான அகச்சான்று உளது. பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜாவாவைத் தலைநகராகக் கொண்ட சைலேந்திரப் பேரரசோடு, சோழர்கள், அரசியல் உறவுகளை மேற்கொண்டிருந்தனர். தாய்லாந்து என இப்போது அழைக்கப்படும், பண்டைய சையாம் நாட்டில் ஏழாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது தென்னாட்டிலிருந்து சென்ற ஒரு வணிகக் குழுவைக் குறிப்பிடுகிறது. கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்தே இந்தோசீனாவில் உள்ள ப்யூனன் (Fufian) நகரம், தென்னிந்தியர்களால் குடிவாழப்பெற்றிருந்தது. மரபுவழிச் செய்தி ஒன்று, “கெளண்டின்ய” என்ற பெயர் உள்ள பார்ப்பனன் ஒருவனை, அந்நாட்டு முதல் அரசனாக அரியணையில்