பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 135 நாவுல பட்டிராம-நீ நவட்டி முழுங்கிரணும். சேகரித்தவர். இடம்: S.M. கார்க்கி சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம். அத்தை மகன் முறை அவளுக்கு அவன் அத்தை மகன் முறை. இருவரும் காதலித்துக் கூடுகிறார்கள். அத்தைமகன் அவளோடு கொஞ்சிப் பேசுகிறான். கிண்டலும் கேலியும் கலந்து அவளை வாயடைத்து வெட்கித் தலைகுனிய வைத்துவிட முயலுகிறான். பேச்சில் அவனுக்கு அவள் அடங்கவில்லை. அத்தைமகன் முறையாலே சற்று வாயை அடக்கிக்கொள்ளுவதாகச் சொல்லிக் கொண்டே அவன் வாயை அடக்கப் பார்க்கிறாள். போட்டியில் வெற்றி இருவருக்கும்தான்! ஆண்: ரோட்டோரம் தோட்டக்காரி மல்லியப்பூ சேலைக்காரி நீ இறைக்கும் தண்ணியிலே மல்லியப்பூ மணக்குதடி! பெண்: அஞ்சு கிணத்துத் தண்ணி அரைக் கிணத்து உப்புத்தண்ணி செம்புக் குடத்துத் தண்ணி சேருறது எந்தக் காலம்? ஆண் : பொலி போடும் காட்டுக்குள்ள பொதுக்கடை போடயில நீ வர்டி செவத்தப்புள்ள உனக்குழக்கு நெல் தாரேன் பெண்: நிலக்கடலை நாழி வேணும் நேரான பாதை வேணும் ஜோடி மட்டம் ரெண்டு வேணும் சொகுசா வழி நடக்க ஆண் : மஞ்சக் கிழங்கு தாரேன் மார்புக் கேத்த ரவிக்கை தாரேன்