பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 225

எண்ணைக் கருப்பே என்னிலும் ஏ கருப்பே தண்ணிக் கருப்பை தனியே வரக்காணலியே! கண்டாங்கிச் சேலைக்காரி கைநிறைஞ்ச வளையல்காரி கண்டா வரச் சொல்லுங்க ரெண்டாம் நம்பர் தோட்டத்துக்கு மாரளவு கருதுப் புஞ்சை மதிகிளி காக்கும் புஞ்சை கூட்டக் கருதுக்குள்ளே குயிலும் வரக் கண்டியளா? சாலை இருபுறமும் சந்தனவாழ்மரமே கொழுந்து மாமரத்தை கூடுதற்குத் தேடுறனே கிழக்கே விளாத்திகுளம் கிளிக்குஞ்சு போயிருக்கு கண்டா வரச் சொல்லுங்க கல்யாண வாசலுக்கு

(பெண்கள் பாடுவது)

ஆளுலேயும் குட்டை அழகுலயும் பூஞ்சிவப்பை நடையிலயும் நைச்சிவப்பை நடுத் தெருவில் காணலியே! புதுப்பானைக் கருப்பழகை புத்திரன் போல் நடையழகை சிரிப்பாணி மன்னரையும் தெருவில் வரக் கண்டியளா? தோப்பிலயோ சேவல் கட்டு தோகைமயில் போயிருக்கு கண்டா வரச் சொல்லுங்க கானமயில் வாடுரண்ணு ஊருசுத்திக் காளை எங்கே உள்ளுரு மட்டத் தெங்கே நாடு சுத்திக் காளைஎங்கே நடக்க விட்டு நான் பார்க்க